Politics
மும்பையில் கூடிய "இந்தியா" கூட்டணியின் முக்கிய தலைவர்கள்.. எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் என்ன ?
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது. பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், பெங்களுருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது.
அதேபோல தற்போது இந்த கூட்டணியில் கூட்டணியில் இலச்சினை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலும், நாட்டின் பன்னோக்கை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த இலச்சினை அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் ஆலோசகர்களை தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஷரத் பவார், மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரின் பெயர்கள் இதற்கான பரிசீலனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், கூட்டணி, தேர்தல் பங்கீடு, பொது வேட்பாளர் தொடர்பாக முக்கிய முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!