Politics
ஒன்றிய அமைச்சர் வீட்டில் சடலமாக கிடந்த இளைஞர்.. துப்பாக்கியால் சுடப்பட்டது அம்பலம்.. உ.பியில் அதிர்வலை !
ஒன்றிய அமைச்சராக இருந்து வருபவர் கவுசல் கிஷோர் (Kaushal Kishore). இவர் ஒன்றிய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பர்காரிய என்ற கிராமத்தில் அமைந்துள்ள இவரது வீட்டில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் பெயர் வினய் ஸ்ரீவஸ்தா என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வு இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர் எதற்காக வந்தார் என்று விசாரிக்கையில், அவர் சுட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியானது உரிமம் பெற்றது எனவும், அந்த துப்பாக்கி ஒன்றிய அமைச்சரின் மகனான விகாஷ் கிஷோருக்கு சொந்தமானது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதோடு இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், சந்தேகத்திற்குறிய வகையில் இருக்கும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து ஒன்றிய அமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். எனினும் அவரை சுட்டது யார் என்று இன்னமும் தெரியவரவில்லை. ஒன்றிய அமைச்சர் கவுசல் கிஷோர் வீட்டில், அவரது மகனின் துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?