Politics
”இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” - தனியார் பயிற்சி மையங்களை கடுமையாக சாடிய ராஜஸ்தான் முதல்வர் !
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாகத்தில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. இன்று கடந்த மாதம் நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்னர் கூட JEE தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் 2022ல் 15 மாணவர்களும், 2019ல் 18 பேரும், 2018ல் 20 பேரும், 2017ல் ஏழு பேரும், 2016ல் 17 பேரும், 2015ல் 18 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயிற்சி நிறுவனங்களில் சேர்வதால் மாணவர்கள் இரட்டைச் சுமை சுமைக்கின்றனர். இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார். மாணவர்கள் தொடர் தற்கொலை குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் தொடர்பான தனது விமர்சனத்தை முதல்வர் அசோக் கெலாட் பதிவு செய்தார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் , “9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்களில் சேர்ப்பதால், அது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
போலி பயிற்சி மையங்களிலும் சேர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களது பள்ளிகளுக்குச்செல்வதில்லை. அவர்களின் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மாணவர்கள் இரட்டைச் சுமையை சுமைக்கின்றனர். இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது.இந்த ஆண்டு மட்டும் கோட்டா பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 21 மாணவர்களில் 14 பேர் குறிப்பிட்ட கோச்சிங் நிறுவனத்தில் படித்தவர்கள்” எனக் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!