Politics
பாஜக ஆட்சியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிட்டு மோடியை சாடிய மெகபூபா!
இந்தியாவில் அண்மைக்காலமாக தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரிய வன்முறையாக உருமாறியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மோடி, அமித்ஷா மணிப்பூர் மாநில பாஜக அரசு என யாரும் வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பல்வேறு போராட்டங்கள் முயற்சிகளுக்கு பிறகு மோடி நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து வாய் திறந்து பேசினார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் முடிந்த பாடில்லை. இதனிடையே ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் மதகலவரத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய மக்கள் தாக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி உயிரிழப்புகளோடு அவர்கள் வீடு உள்ளிட்டவை சூறையாடப்பட்டனர். இப்படியே தொடர்ந்து பயங்கரவாதத்தை கையாளும் பாஜகவினருக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவங்களோடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ராம ஜெயந்தி, என பல நிகழ்வுகளில் நாட்டில் பல கலவரங்களை பாஜக கும்பல் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்வை எல்லாம் சுட்டி காட்டி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், "இப்போதெல்லாம் இங்கே வன்முறைகள் ஓங்கி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கி கலாச்சாரம் இருக்கிறது.
இங்கு பாஜவினர் பரப்பும் வெறுப்புணர்வை நீங்கள் பார்க்கலாம். ஒருவரை ஒருவர் கொல்வதற்கு கூட துப்பாக்கியை பயன்படுத்த தயாராக இருக்கின்றனர். இது பாகிஸ்தான், சிரியா போன்ற இடத்தில் நடக்கும் சம்பவங்கள். அங்கே 'அல்லாஹு அக்பர்' என்று கத்திக் கொண்டு மக்களைக் கொல்கிறார்கள்; இங்கே 'ஜெய் ஸ்ரீ ராம்' என்கிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
இங்கு மக்கள் எல்லோரும் துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர் என்றால் அது பிரதமர் மோடியால் தான். ஆனால் இறுதியில் வெறுப்பைவிட அன்புதான் வெல்லும். பாஜக, கோட்ஸே இந்தியாவை உருவாக்கு நினைக்கிறது. இது அவர்களுக்கும் காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போர்.
'இந்தியா' கூட்டணி சரியான காரணத்துக்காகப் போராடுகிறது. மதவெறிக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ராகுல் காந்தி வழிநடத்துவார் என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளை குறிவைத்து அரசு நிறுவனங்களை பாஜக தவறாக நடத்துகிறது. இது ஒரு சவாலான பணியாக இருக்கும், ஏனென்றால் இந்தியா பாஜகவை மட்டுமல்ல, அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற அமைப்புகளையும் எதிர்கொள்ளப் போகிறது.
பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதியளித்ததை எடுத்துக் கொள்ளாமல், கடந்த காலத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்; நாட்டின் எதிர்காலம் குறித்து அவர் அமைதியாக இருக்கிறார். ஆர்டிகிள் 370 ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு காஷ்மீர் இயல்பு நிலையில் உள்ளது என்பது ஒரு கட்டுக்கதை. ஜம்மு கடுமையாக பாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!