Politics
நாங்குநேரி கொடூரம்.. கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர்.. உறுதி செய்த திமுக மாவட்ட செயலாளர்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் சின்னதுரை என்ற மாணவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 பேர் கொண்ட மாணவ கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதனை தடுக்கமுயன்ற சின்னத்துரையின் தங்கை சந்திராவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரையுடன் படிக்கும் சக மாணவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மீது அவதூறு பரப்பப்பட்டது. இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மேல் அவதூறு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில், இத்தகைய அவதூறுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாண வர்கள் மோதல் சம்பவத் திற்கு காரணமானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என ஒரு பொய்யான குற்றச்சாட்டை மாநில பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் நாங்குநேரியில் வார்டு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பாஜக முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியும் உள்ளார். இது அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதையெல்லாம் மறைத்து விட்டு திமுகவிற்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இதை மறைத்து அண்ணாமலை திமுக ஒன்றிய செயலாளர் மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயல் ஆகும். இதை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற நேரங்களில் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிடுவது ஒரு கட்சி யின் தலைவருக்கு அழகு இல்லை என்பதை தெரி வித்து கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!