Politics
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #NirmalaTheLIAR ஹேஷ்டேக்.. பொய் சொல்லி சிக்கிக்கொண்ட நிர்மலா சீதாராமன் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் தமிழ்நாடு சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறது.
அதிலும் திமுக தலைமையிலான அரசு அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், அதுவரை நடைமுறையில் இருந்த மும்மொழிக் கொள்கையை மாற்றி இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் தமிழ்நாடு அனைத்து துறையிலும் முன்மாதிரி மாநிலமாக மாற தமிழ்நாடு இந்தியை புறக்கணித்தது முக்கிய காரணமாக திகழ்கிறது.
எனினும் இந்தி பிரச்சார சபா போன்ற அமைப்புகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் இயங்கியே வருகிறது. அதில் லட்சக்கணக்கானோர் பயின்றும் வருகின்றனர். இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் தன்னை இந்தி, சமஸ்கிருதம் படிக்கவிடாமல் தடுத்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் சொல்லியதாக இணையவாசிகள் நிர்மலா சீதாராமனை விமர்சித்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் #NirmalaTheLIAR என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த நிலையில், அது இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்ட் ஆனது. இதன் மூலம் நிதியமைச்சரின் பொய்களை நெட்டிசன்கள் பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?