Politics
'இந்தியா' என்ற பெயருக்கு பதில் 'பாரத்' - சட்டங்களின் பெயர்களை மாற்ற புதிய மசோதாவை தாக்கல் செய்த பாஜக !
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆறு முக்கிய அடிப்படை செயல்திட்டங்களை உருவாக்குவது குறித்தும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமில்லாமல் அதை உரிய முறையில் தேர்தல் களத்தில் செயல்படுத்த பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கேட்டாலே பாஜக தலைவர்கள் அலறி வருகின்றனர். பலர் நமது நாட்டின் பெயர் இந்தியாவே இல்லை பாரதம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடந்துவரும் நிலையில், அதில் பாஜக பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இந்தியா என்ற பெயரை மாற்றும் விதமாக சட்டங்களின் பெயரில் இருந்த இந்தியா என்ற பெயரை நீக்கி பாரத் என பெயர் சூட்ட பாஜக முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு மாற்றி, அதற்கு பதில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என்ற பெயர்களை சூட்டுவதற்கான மசோதாக்களை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் சம்ஸ்கிருத திணிப்பிலும் பாஜக பகிரங்கமாக ஈடுபட்டு வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!