Politics

ஜோடோ யாத்திரை 2.0... -குஜராத் டு மேகாலயா.. ராகுலின் அடுத்த அதிரடியால் கலக்கத்தில் பாஜக தலைவர்கள் !

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்த யாத்திரை காங்கிரஸ்க்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியான இமாச்சல பிரதேசம், கர்நாடகா போன்ற இடங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்த முக்கிய காரணமாகவும் இருந்தது. அதோடு காங்கிரசுடன் சேராமல் இருந்த பிராந்திய காட்சிகளை காங்கிரஸோடு கூட்டணி வைக்க செய்யும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த யாத்திரை ராகுல் காந்தி மீதான பயத்தை பாஜகவுக்கும் மோடிக்கும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த அதிரடியாக ராகுல் காந்தி குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை அடுத்த யாத்திரை செல்லவுள்ளதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவித்துள்ளது பாஜகவுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோல்" கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது பாகத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை இந்த யாத்திரையை அவர் நடத்தவுள்ளார். ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தத்தம் பகுதிகளில் யாத்திரைகளை ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர்" என்று கூறியுள்ளார். இந்த தகவல் பாஜக தலைவர்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் சொன்ன பொய்யை அம்பலப்படுத்திய முரசொலி!