Politics
மாணவிகளின் அந்தரங்க VIDEO விவகாரம்: கர்நாடக முதல்வர் குறித்து அவதூறு.. பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது!
கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற பெயரில் கண்கள் தொடர்பான மருத்துவ தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வரும் சூழலில், BSc Optometry என்ற படிப்பை படிக்கும் மாணவிகளின் Rest Room-ஐ பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை கண்ட மாணவி ஒருவர் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்ததன்பேரில் விசாரிக்கையில், அதே வகுப்பை சேர்ந்த 3 மாணவிகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். மேலும் அவர்கள் Rest Room-ல் தங்கள் மொபைல் போன்களை வைத்து விட்டு, அங்கு வரும் பெண்களின் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து அதனை தங்கள் ஆண் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில், இதனை வேறு சில பெண்களை பழி வாங்கும் நோக்கில் பல நாள்களாக Rest Room-ல் மொபைல் வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வந்ததும், இதில் புகார் கொடுத்த பெண்ணின் வீடியோ தெரியாமல் பதிவானதாகவும் விளக்கம் அளித்தனர். இது போல் பல நாட்கள் இந்த மாணவிகள் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணின் வீடியோவை மட்டும் அவர் முன் டெலிட் செய்துள்ளனர் அந்த மாணவிகள்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 3 மாணவிகளை கல்லூரியில் இருந்து, நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி, அவர்களை பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மாணவிகளின் செல்போன்களை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அம்மாநில போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மாணவிகள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை பாஜக தனது விஷம அரசியலை கலந்து அவதூறு பரப்பி வருகிறது. அது மட்டுமின்றி, இதுகுறித்து வீடியோ வெளியானதாக கூறி, போலியான வீடியோவை 'உடுப்பி வீடியோ' என்ற பெயரில் பாஜகவினர் வெளியிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
எனவே அம்மாநில போலீசார், இதுபோன்ற போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பரப்ப வேண்டாம் என்றும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பாஜகவை சேர்ந்த பெண் பிரமுகரான சகுந்தலா என்பவர் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா குறித்தும், அவரது குடும்பத்தாரை குறித்தும் அவமானப் படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மாநில முதலமைச்சர் சித்தராமையா குறித்தும், அவரது குடும்பத்தாரை குறித்தும் அவமதித்து ட்வீட் செய்த பா.ஜ.க பிரமுகர் சகுந்தலாவை கைது செய்ய கோரி, பெங்களூரிலுள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சகுந்தலாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!