Politics
மணிப்பூர்: தூங்கிக்கொண்டிருக்கிறார் பிரதமர்.. மோடியை விமர்சித்து பாஜகவிலிருந்து விலகிய செய்தி தொடர்பாளர்!
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மணிப்பூர் கலவர விவகாரத்தில் பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்து விமர்சித்த மணிப்பூர் இளைஞர் போலிஸார் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு குக்கி சமூக மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு அமைதி காக்கிறது.
இந்த நிலையில், மணிப்பூர் சம்பவத்தில் மோடி தூங்கிக்கொண்டிருக்கிறார் எனக் கூறி பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். பீகார் மாநில பாஜக செய்தி தொடர்பாளராக இருப்பவர் வினோத் சர்மா. இவர் திடீரென நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூரிலுள்ள சூழ்நிலை இந்தியாவை அவமதித்துவிட்டதாக கருதுகிறேன். மணிப்பூரில் நிலவும் சூழலை ஒரு மனிதனாக என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் எனது கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கிறார், முதல்வர் பிரேன் சிங்கைப் பதவி நீக்கம் செய்ய அவருக்குத் தைரியம் இல்லை. ணிப்பூரில் நடப்பது போன்ற கொடூரம், வேறு எங்கும் நடந்ததில்லை. இதனால் நான் நான் கனத்த இதயத்துடன் பா.ஜ.க-விலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!