Politics
'இந்தியா' என்ற பெயரை பார்த்து பதட்டத்தில் கூச்சலிடும் BJP : மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலடி!
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சி மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் எதிர்க்கட்சி தலைவர்கள் கவலைப் படாமல் பா.ஜ.கவை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியால் கலக்க மடைந்துள்ள பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட இந்தியா இருக்கும்" என விமர்சித்துள்ளார். பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,:" "இந்தியா" என்ற கருத்தை மணிப்பூரில் இருந்து மீண்டும் உருவாக்குவோம். எங்களை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள், நாங்கள் "இந்தியா". மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கவும், மாநிலத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம். மக்கள் அனைவரிடையே அன்பையும் அமைதியையும் மீண்டும் திரும்பக் கொண்டு வருவோம்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா “எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா"விற்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை பாஜகவுக்கு வாக்களித்தவர்களைவிட இருமடங்கு அதிகம். இந்தியாவே இன்று பா.ஜ.கவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. உங்களின் திசைதிருப்பல் முயற்சியால், "இந்தியா"’-வை எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். ஆனால் உங்களின் தோல்வி மிக அருகில் தான் உள்ளது" என கூறியுள்ளார்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் “எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ’இந்தியா’ என பெயரிட்டதிலிருந்தே பாஜக பதட்டத்தில் கூச்சலிட்டு கொண்டு இருக்கிறது. ’இந்தியா’விற்கு பதிலளிக்க முடியாமல் மோடி திணறுகிறார். வெளியில் பேசுவதை நிறுத்திவிட்டு, நாடாளுமன்றம் வாருங்கள். ’இந்தியா’ பெயர் உள்ளிட்ட அனைத்தையும் விவாதிப்போம். நாடாளுமன்றம் வாருங்கள் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!