Politics
கால்நடைத் தீவன முறைகேடு.. 9 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் பாஜக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை !
குஜராத் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. அதில் பல வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்காமலேயே நிலுவையில் இருந்து வருகிறது.
எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலத்தில் சிறிய விவகாரத்தை கூட பெரிதாக ஊதிபெருக்கி ஒன்றிய விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கும் பாஜக அரசு, தனது கட்சி அமைச்சர்கள் குறித்த புகார்களை குறித்து பதில் பேசாமல் தொடர்ந்து விசாரணை அமைப்புகளை மௌனமாக்கி வருகிறது.
முன்னாள் கர்நாடக முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி போன்ற தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்காமலேயே வைத்து அவர்களை காப்பாற்றி வருகிறது. அதையும் மீறி பாஜக நிர்வாகிகள் மீதான சில ஊழல் புகார்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அந்த வயதில் தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுக்கு ரூ.22.5 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு குஜராத் அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. இவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் (அமுல் ) கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
அப்போது மகாராஷ்டிராவிற்கு கால்நடைத் தீவனம் அனுப்ப முடிவெடுத்தது அதற்காக பால் பண்ணை வாரியக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் கொண்டு வரப்படாமலோ, டெண்டர் விடாமலேயே முடிவெடுத்துள்ளார்.
இதில் மகாராஷ்டிராவுக்கு முறையாக மாட்டுத் தீவனத்தை வழங்காமல் அரசுக்கு ரூ.22.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பாஜக அமைச்சர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், விபுல் சவுத்ரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மெஹ்சானா நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!