Politics
தமிழ்நாடு ஆளுநரின் 'சேடிச' மனப்பான்மை.. கேரள ஆளுநரை உதாரணமாக காட்டி சிலந்தி கட்டுரை விமர்சனம் !
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியை நினைத்தால் பல நேரங்களில் "சிரிப்பதா? கோபப்படுவதா?" என்றே தெரியவில்லை! ஆடுதிருடிய திருடன் என்பார்களே அதுபோல அவர் அகப்பட்டு முழிப்பதை நம்மால் உணரமுடிகிறது! எதையும் யோசிக்காது முடி வெடுக்கும் ‘முந்திரிகொட்டை'தனத்தால் அவர், தான் மட்டுமல் லாமல் தான் வகிக்கும் பதவியையும் தரம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளது! சில ஆளுநர்கள் விமர்சனத் துக்கும் ஆளாகியுள்ளனர். ஆனால் இன்றைய ஆளுநர் ரவி போல எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மங்களாக யாரும் இருந்ததில்லை. தன்னைப்பெரிய வரலாற்று அறிஞராகக் கருதி பல்வேறு அபத்தக் கருத்துக்களை அவ்வப்போது அள்ளி வீசி வருகிறார்! ஆனால், திராவிட இயக்க வரலாற்றை அவர் படிக்கவில்லை என்பதை அவரது செயல்பாடுகள் தெளிவாக்குகின்றன. இந்த இயக்கம் தன்மான உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம்! சுயமரியாதை எனும் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட கொள்கைக் கோட்டம் இது! பதவிகளை எதிர்நோக்கி எழுந்த இயக்கமில்லை தி.மு.க. அதனைத்தான் தனது சமீபத் திய காணொலி பேச்சில் முதல மைச்சர் தளபதி ஸ்டாலின் துள்ளியமாக எடுத்துரைத்தார்!“நாங்கள் ஆட்சிக்காக கட்சி நடத்துகிறவர்கள் அல்ல: கொள்கைக்காக கட்சி நடத்துபவர்கள்.....
மத வாதம், சாதிய வாதம், சனா தனம் பிறப்பால் உயர்வு-தாழ்வு. மேல்-கீழ் இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோத மான பிற்போக்கு எண்ணங்க ளுக்கு எதிரானவர்கள் நாங் கள்...." எனப் பேசிய கழகத் தலைவர் தளபதியின் உரையில் காணப்பட்ட கனிவு - தெளிவு துணிவு ஆளுநர் ரவி அறிந்திட வேண்டிய ஒன்றாகும்! எதிரிகளின் வியூகங்களை எதிர் வியூகம் கொண்டு தகர்க்கும் ஆற்றலை தங்கள் தலைவர்கள் மூலம் கற்று அறிந்துள்ளது தி.மு.க.! அக்னி அஸ்திரம் எய்து அழிக்க நினைத்தால் வருணாஸ்திரம் ஏவி அதனை நிர்மூலமாக்கும் வியூகங்களை எங்கள் கழகத்தவர் அறிந்தவர்கள் என்பதை, சட்ட மன்றத்தில் அரசு தயாரித்துத் தந்த உரையைப் படிக்காது தனது சொந்த சரக்குகளை இணைத்தும், சிலவற்றை தவிர்த்தும் படித்துவிட்டு தான் ஏதோ நாகஅஸ்திரம் எய்துவிட்டதாகக் கருதி பெருமிதத்தோடு ஆளுநர் ரவி நிமிர்ந்தபோது அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநர் ஆற்றிய உரை அவைக்குறிப்பில் ஏறாது, அரசு தயாரித்துத் தந்த உரைதான்அவைக் குறிப்பில்இடம் பெறும் என அவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வீசிய நாக அஸ்திரத்தை, கருட அஸ்திரம் எய்தி முனை மழுங்கச் செய்தாரே அப்போதே ஆளுநர்உணர்ந்திருக்க வேண்டும், தமிழ்நாட்டில் தனது ஆட்டம் மேடை ஏறாது என்பதை!
பின்னர் தேவையின்றி சில சர்ச்சைகளில் ஈடுபடத்துவங்கினார். தமிழ்நாட்டு மக்களின் மொழி உணர்வோடு மோதிப் பார்த்தார், தமிழ்நாடு என்பது சரி யல்ல; தமிழகம் என்பதே சரி எனப்பேசிவிட்டு, அவரே தன்னிச்சையாக தமிழ்நாடு ராஜ்பவன் என்பதை மாற்றி தமிழக ராஜ்பவனாக்கி எதிர்ப்பு வலுத்ததும் ஆமை ஓட்டுக்குள் முடக்கிக் கொள்வது போல முடக்கிக் கொண்டார். சமத் துவத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியில் சனா தன, வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு தூபம் போடும் வகையில்பேசினார். எல்லாவற்றிலும் தலையிட்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்! தனது அதிகார வரம்பு என்ன என்பது அறியாது முடி வெடுக்கிறார்! பிறருக்கு தொல்லை தந்து இன்பம் காணும் ‘சேடிச’த்தனம்தான் அவரது செயல்களில் பெருமளவு பிரதிபலிக்கிறது. சமீபத்தில் அமைச்சர் பொன் முடி செய்தியாளர்களை சந்தித்து ஒரு திடுக்கிடும் தகவலைத் தந்தார். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத் துறையை ஏவி விடப்பட்ட சில நாட்களுக்கு முன்பே ஆளுநர், செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு ஆளுநரின் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி முதலமைச்சர் பதில் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
அப்படி ஒரு கடிதம், அதாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கக் கோரி, முதலமைச்சருக்கு எழுதியிருந்தார் என்பதே. ஆளுநர் ரவி அரசியல் சட்டம். ஆளுநர்களுக்கு அளித்த அதிகார வரம்பை உண ராது செயல்படுகிறார் என்பதைக்காட்டவில்லையா? இதேபோன்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கேரளத்தின் ஆளுநர், ஆரிப் முகமது கான்,கேரள முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் பட்ட பாட்டை ஆளுநர் ரவி படித்தறிந்திருப்பாரே! அவர் மறந்திருந்தால் நினைவுக்காக அந்த நிகழ்வை மீண்டும் அவருக்கு நினைவு படுத்துகிறோம்.
கேரளாவின் நிதி அமைச்சரை பதவி விலக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் முதல்வருக்கு கடிதம் எழுதினார். தான் கோருவது அரசியல் சாசனப்படி 164 (1) விதிப்படி சரியானது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்! முதலமைச்சர் பினராய் விஜயன் ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்து, பதில் கடிதம் அனுப்பினார். ஆளுநரின் இந்தச் செயல் பெரிய அளவில் கேரள அரசியலில் விவாதிக்கப்பட்டது. பல ஏடுகள் ஆளுநரின் செயலைக் கண்டித்து எழுதின. “அமைச்சர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்யும் எந்த ஒரு ஏற்பாடும் அரசியல் சாசனத்தில் இல்லை” என ‘இந்து' போன்ற ஏடுகள் தலையங்கம் தீட்டின.இந்து ஏட்டின் தலையங்கத்தில் ஒருபடி மேலே போய், "அரசியல் சாசனத்தின் கீழ் தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி அதீத எண்ணத்தில் ஆளுநர்கள் இருப்பது போல ஒரு தோற்றம் இருக்கிறது.அவர்களுக்கு அரசியல் சாசனத்தைக் காக்கும் பொறுப்பு இருப்பது உண்மைதான்! ஆனால் அதன் பொருள், ‘எந்த ஒரு காலக் கெடுவும் விதிக்கப்படாததைப் பயன்படுத்தி, முடிவெடுப்பை தள்ளிப் போடலாம் என்பதோ,
ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை என்பதைப் பயன்படுத்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு) இணையான அதிகார மையமாக செயல்படலாம் என்பதோ அல்ல.இப்படி ஏடுகள் பல கேரள ஆளுநரின் இதுபோன்ற செயல் அவருக்கு தரப்பட்ட அதிகாரத்தின் எல்லை தாண்டிய அத்து மீறல் என்பதை தெளிவாக்கின!அமைச்சரை விலக்க வேண்டும் என முதல்மைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு அது குறித்து பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளான ஆளுநர் ஆரிப்கான், டெல்லி சென்று திரும்பி வந்து தனது முடிவு குறித்து “Whatever advice | had to give, I have given and ulti mately I accept the decision of Cheif Minister Pinarayi Vijayan" அதாவது, “நான் என்ன அறிவுரை கூற வேண்டுமோ அதனை நான் தெரிவித்தேன். இறுதியாக முதலமைச்சர் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று செய்தியாளர்களை சந்தித்து கூறியது எல்லாம் நமது தமிழ்நாடு ஆளுநருக்கு தெரியாதா?
தெரியாதிருக்க நியாயமில்லை; தெரிந்திருந்தும் ஏன் அதிகார வரம்பு மீறி கடிதங்கள் அனுப்புகிறார்? - என்ற கேள்வி எழுவதும் நியாயமானதுதான்! சிலருக்கு எதையாவது குத்தி, குதறிக் கொண்டே இருப்பதில் ஒரு வித ஆனந்தம்; அதனைத்தான் சேடிசம் என்று கூறுவார்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கைகளைக் காணும்போது இதுதான் நம் நினைவுக்கு வருகிறது! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாட்டு மண்! இங்கே சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபடாதீர்கள்! இது திராவிட மண்; நடப்பது திராவிட மாடல் ஆட்சி! இதை நடத்துபவர்கள் கொள்கை மறவர்கள்!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!