Politics
அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லையா?: பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பும் 10 கட்சிகள்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.
இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லையா? என காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்கட்சிகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.
இது குறித்து இன்று காங்கிரஸ், ஜே.டி.யூ, இடதுசாரிகள், திருணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் நிர்வாகிகள் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், "ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், பா.ஜ.க அரசியலும்தான் மணிப்பூர் கலவரத்துக்கு காரணம். கடந்த 10 நாட்களாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் நேரம் தர மறுக்கிறார்.
பிரதமருக்கு மணிப்பூர் பிரச்னைகளை தீர்க்க நேரம் இல்லை. ஆனால் அமெரிக்கா செல்ல அவருக்கு நேரம் உள்ளது. உயிருக்கு பயந்து இதுவரை 60 ஆயிரம் மணிப்பூர் மக்கள் மிசோரம், அசாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒன்றிய அமைச்சரே சட்டம் ஒழுங்கு இங்கு இல்லை என கூறும் அளவுக்கு மணிப்பூரின் நிலமை உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!