Politics
செயற்கையாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது பாஜக அரசு - ப.சிதம்பரம் விமர்சனம்!
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இது தவிர சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மறைமுகமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல் -டீசல் விலையை குறைக்காமல் இருந்து வருகிறது. அதே நேரம் குறைந்த கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தாலும் பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வருகிறது. தற்போதைய சூழலில் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோல் கிடைத்தாலும் அதன் லாபத்தை அம்பானி போன்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு விலையை குறைக்காமல் பாமர மக்களை பாஜக துன்பப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பாஜக மற்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பக்கத்தில், "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இதை மக்கள் நம்ப வேண்டும் என்றால் அவர் இன்றைய (30-5-2023) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் தலையங்கத்தைப் படித்து அதன்படி நடந்து கொள்ளலாமே?. அந்த நாளிதழ் எதிர்க்கட்சிகளுக்குச் சொந்தமான நாளிதழ் இல்லையே. கச்சா எண்ணையின் விலை குறைந்த காலத்தில்கூட அரசு செயற்கையாகப் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி்வைத்திருப்பதை அத்தலையங்கம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 2014 முதல் 2021 வரை மற்றும் அக்டோபர் 2022 முதல் இன்று வரை கச்சா எண்ணையின் விலை குறைந்து இருந்த போதும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை, ஏன்?. காரணம்: பெட்ரோல், டீசல் மீது கடுமையான, பொருந்தாத வரி் மற்றும் செஸ் விதித்ததுதான் காரணம். இதை நாங்கள் சொன்னால் நிதி அமைச்சருக்குக் கோபம் வருகிறதே, ஏன்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!