Politics
வாய்ப்பு கிடைத்தால் பாஜக கேரளாவை தீயிட்டுக் கொளுத்தும் -எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சனம் !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.பாஜகவின் இந்த தோல்வி அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜகவின் இந்த தோல்வி குறித்து பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் கூட பாஜக கேரளாவை தீயிட்டுக் கொளுத்தும் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். கேரள மாநிலம் ஃபோர்ட் கொச்சியில் நடைபெற்ற 'யுவதாரா' இளைஞர் இலக்கிய விழாவில் கலந்துகொண்ட புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் பின்னர் நிகழ்ச்சியில் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கர்நாடக தோல்வி குறித்து பேசிய அவர், "கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அதை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு கேரளாவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இது தொடரவேண்டும். ஒருவேளை தனக்கு வாய்ப்பு கிடைத்தால் பாஜக கேரளாவை தீயிட்டுக் கொளுத்தும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!