Politics
27 முதல் 60 வயது வரை.. தொடர்ந்து 8 முறை MLA.. 3 முறை அமைச்சர்.. 2 முறை தலைவர்: யார் இந்த DK சிவகுமார்?
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -தேதி (நேற்று) இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமையவுள்ள நிலையில், இதில் முதலமைச்சர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கும் போட்டி நிலவி வருகிறது.
இதில் யார் அடுத்த முதலமைச்சர் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சி இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இதனிடையே தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே.சிவகுமாரின் அரசியல் பயணம் குறித்து இதில் பார்க்கலாம்.
யார் இந்த டி.கே. சிவகுமார்.?
=> முழுப்பெயர் தொட்டஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார் (DK சிவகுமார்). தற்போது 60 வயது.
=> 1989 முதல் 2004 வரை சாத்தனூர் தொகுதியில் 4 முறையும், 2008 முதல் தற்போது வரை கனகபுரா தொகுதியில் 4வது முறையும் என தொடர்ச்சியாக 8வது முறையாக MLA-வாக உள்ளார்.
=> 1990 - 1992 காலகட்டத்தில் இவர் தனது 27 வயதில் MLA-வான முதல்முறையே அப்போதைய கர்நாடக முதலமைச்சரான சரோகப்பா பங்காரப்பா அமைச்சரவையில் "சிறை மற்றும் ஊர்க்காவல் துறை" அமைச்சராக இருந்துள்ளார்.
=> 1999-ல் சாத்தனுர் தொகுதியில் JDS கட்சித் தலைவர் H.D. குமாரசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
=> ரூ.840 கோடி சொத்து இருப்பதால் பணக்கார அரசியல்வாதிகளில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
=> இவரது சகோதரர் D.K. சுரேஷ், காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
=> 2013 - 2018 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 'எரிசக்தி துறை' அமைச்சராக இருந்தார்.
=> 2018 - 2019 வரை HD குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் 'நீர்ப்பாசனம், கலாச்சாரம், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை' அமைச்சராக இருந்தார்.
=> 2017ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 42 பேரை பாதுகாப்பாக பெங்களூருவில் தங்க வைத்து, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் அன்றைக்கு எம்.பி.யாக உறுதுணையாக இருந்தார்.
=> 2002ல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோது, தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை, பெங்களூருவில் தங்க வைத்து, ஆட்சியை பாதுகாக்க உதவினார்.
=> 2019 செப்டம்பரில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்தார்.
=> ஒருமுறை "உங்களுக்கு முதல்வராகும் ஆசை இருக்கிறாதா?" என்ற செய்தியாளர் கேள்விக்கு "நான் என்ன சந்நியாசியா?" என பதில் அளித்தார் டி.கே. சிவக்குமார்.
=> 8வது முறையாக தொடர்ந்து எம்.எல்.ஏ ஆகியுள்ள இவர், இந்தமுறை பெற்றுள்ள வாக்குகள் 1,43,023. இதன் மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரையும் டெபாசிட் இழக்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றார்.
=> இந்தமுறை பாஜகவின் 'ஒக்காலிக சமூகத்தின்' முகமாய் கருதப்படுபவரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.அசோகாவை வீழ்த்தி இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்து இருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!