Politics
கர்நாடகாவில் உயரும் கை.. காங்கிரஸுக்கு ஆதரவாக வந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் !
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சட்டப்பேரவையில் காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அங்கு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில், இதில் 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என ஜீ நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களில் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவுக்கு 78 முதல் 90 இடங்கள் ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 29 இடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிவி-9 நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 99 முதல் 109 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்கட்சியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவுக்கு 88 முதல் 98 இடங்கள், ஜேடிஎஸ் கட்சிக்கு 21 முதல் 26 இடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 இடங்கள் வரை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் பாஜக 85 முதல் 100 இடங்கள் வரை வெல்லும் எனவும், ஜேடிஎஸ் 24 முதல் 32 தொகுதிகள் வரை வெல்லும் நேரும் கூறப்பட்டுள்ளது.
ஜி நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 118 தொகுதிகள் வரை வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக 79 முதல் 94 இடங்கள் வரை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 25 முதல் 33 இடங்கள் வரை ஜேடிஎஸ் கட்சியும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 100 முதல் 112 இடங்கள் வரை வெல்லும் என்றும், பாஜக 83 முதல் 95 இடங்கள் வரை வெல்லும் என்றும், ஜேடிஎஸ் 21 முதல் 29 இடங்கள் வெல்லும் வரை என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!