Politics
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்.. ஆளுநருக்கு கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்.. பின்னணி என்ன ?
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவிலும் ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதே நிலைதான் தெலுங்கானாவில் நிலவி வருகிறது. 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் மீது ஏன் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாள் அன்று வேறு வழியின்றி ஆளுநர் தமிழிசை அனைத்து மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் "அரசியல் சாசனப் பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை, ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பது என்பதும், அதற்கு மேற்கு வங்கம், கேரளா, டெல்லி அரசுகள் ஆதரவு கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!