Politics
”சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத நீங்கதான் தேசவிரோதி”: ஜே.பி.நட்டாவுக்கு மல்லிகார்ஜுன் கார்கே பதிலடி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி சமீபத்தில் லண்டன் சென்று அங்கிருந்த பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். மேலும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய ராகுல், 'இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கடினம். இந்தியாவில் அரசியல் தலைவர்களே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். என்னுடைய செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிப்பது இல்லை. விவாதங்கள் நடத்த அனுமதிப்பது இல்லை' என்று பேசினார்.
இந்நிலையில் இந்திய ஜனநாயகத்தை ராகுல் காந்தி லண்டனில் அவமதித்துவிட்டார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.கவினர் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் ராகுல் காந்தியின் பேச்சைக் கண்டித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”வெளிநாட்டில் இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலம் நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி தாக்குதல் நடத்தியுள்ளார். காங்கிரஸ் இப்போது தேசவிரோத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்ளது” என தெரித்துள்ளார்.
இவரின் இந்த அறிக்கைக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர்,"ஜனநாயகம் குறித்து விவாதம் செய்பவர்கள் தேசவிரோதிகளா?. ஒருபோதும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத இவர்கள் மற்றவர்களைத் தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள்.
வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளைத் திசை திருப்பவே இவர்கள் இப்படிச் செய்கிறார்கள். "ராகுல் காந்தி எப்போதுமே தேசவிரோதியாக இருக்க முடியுமா?
பிரதமர் மோடி கூட ஆறு, ஏழு நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தியாவில் பிறந்த நான் என்ன பாவம் செய்தேன் என்று மக்களும் தொழிலதிபர்களும் கூறுகிறார்கள் என பேசியுள்ளார். இப்படி மக்களை அவமானப்படுத்தியவர் எங்களைப் பார்த்து தேசவிரோதி என்பதா?. முதலில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!