Politics
அப்போது சிலிண்டரில் மோடி படம்,, இப்போது விளம்பரத்தில் பாஜக தலைவர்கள் படம்- கிண்டல் செய்த TRS கட்சியினர் !
கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டி மாவட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படம் ஏன் இடம்பெறவில்லை என்று அம்மாவட்ட ஆட்சி தலைவரிடம் கடுமையாக சாடி மோடியின் புகைப்படத்தை அங்கு வைத்தார்.இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடி படத்தை ஒட்டி விலை ரூ. 1105 என்று தெலுங்கானாவை ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியினர் குறிப்பிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதை குறிப்பிடும் வகையில் இது போன்று செய்துள்ளதாக அக்கட்சியினர் கூறி மோடிக்கு பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது 1980 களில் மிகவும் புகழ்பெற்ற விளம்பரமாக வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தை வைத்து டி.ஆர்.எஸ். கட்சியினர் பாஜகவை கிண்டல் செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவுக்கு சுற்று பயணம் செய்திருந்தார்.
உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று ஐதராபாத் சென்றார். அவரை கிண்டல் செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் 1980 களில் மிகவும் புகழ்பெற்ற "வாஷிங் பவுடர் நிர்மா" விளம்பரத்தில் நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரத்தில் வரும் சிறுமியின் முகத்திற்கு பதிலாக பிற கட்சிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோரது புகைப்படங்களை வைத்துள்ளனர். இந்த புகைப்படத்துக்கு கீழே வெல்கம் டூ அமித்ஷா என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் தூய்மையானவர்களாக மாற்றப்படுவார்கள் என்பதை விமர்சிக்கும் வகையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிற கட்சி தலைவர்களின் படத்தை மார்பிங் செய்து இந்த விளம்பர பதாகைகளை வைத்திருந்ததாக டி.ஆர்.எஸ். கட்சியினர் கூறியுள்ளனர். .இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?