Politics

வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி.. பாஜக ஆதரவு ஊடகமான opindia மீது வழக்கு.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி !

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.

இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில ஹிந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து இதுபோன்று பரவும் தகவல்கள் தவறானவை என்று தமிழக DGP சைலேந்திர பாபு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். மேலும், வதந்தி பரப்புபவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாஜகவின் சில நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவு ஊடகமான opindia மீது திருநின்றவூர் போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. opindia இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ரூசன், அதன் முதன்மை ஆசிரியர் நுபுர் ஜே சர்மா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நுபுர் ஜே சர்மா பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த சேனல் மீது ஏற்கனவே தவறான செய்திகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இது வரை யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியாக களமிறங்கி நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

Also Read: முன்பதிவு பெட்டியில் TICKET இல்லாமல் பயணம் செய்த கும்பல்: நடுவழியில் இறக்கிவிட்ட ரயில்வே போலிஸார்!