Politics
“மனநலம் குன்றியவர்..” - மாற்றுத்திறனாளிகளை அண்ணாமலையோடு ஒப்பிட்டு பேசிய CTR நிர்மல் குமார் மீது புகார் !
தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.கவின் முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க அசிங்கப்பட்டு கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.
அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் பெண் நிர்வாகி டெய்சி தொடர்பான செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் விவகாரத்தில் தலையிட்டதால் காயத்ரி ரகுராமையும் கட்சியில் இருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டார்.
கட்சியை விட்டு விலகிய பிறகு காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கிழித்தெறிந்து வருகிறார். மேலும் அண்ணாமலையால்தான் பாஜகவில் ஆடியோ - வீடியோ கலாச்சாரம் உருவெடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வரும் இவர், அண்மையில் கட்சியில் இருந்து முழுமையாக நீங்குவதாக அறிக்கை வாயிலாக அறிவித்தார்.
இப்படி தற்போது பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வரும் நிலையில், பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்துள்ளார். இதையடுத்து தான் விலகியது குறித்து அவர் அறிக்கை வாயிலாக நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.
2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். அண்ணாமலை ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையை "'மனநலம் குன்றிய' மனிதரை போல்" என்று குறிப்பிட்டதால் சி.டி.ஆர் நிர்மல்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்ணாமலையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிட்டு பேசி இழிவுபடுத்தியதாக நிர்மல்குமார் மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நடத்தி வரும் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?