Politics
தோற்று ஓடிய அ.தி.மு.க, சுருண்ட நா.த.க, பரிதாப தே.மு.தி.க... ONE MAN ஷோ காட்டிய தி.மு.க. !
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 1,10,039 வாக்குகள் பெற்று தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 43,642 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். அதேபோன்று நாம்தமிழகர் கட்சி 7984 வாக்குகளும், தே.மு.தி.க 949 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ், அ.தி.மு.கவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
இதன் மூலம் தேர்தலுக்கு முன்னர் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்தவர்களுக்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும் பொதுமக்கள் திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும்தான் முழுவதும் நம்புகிறார்கள் என்பதும் இந்த தேர்தல் வெற்றி மூலம் உறுதியாகியுள்ளது.
திமுகவின் 22 மாத ஆட்சியில் மக்களுக்கே ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருப்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!