Politics
சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்த முதல் அமெரிக்க நகரமானது சியாட்டில்.. - நிறைவேறியது சட்டமசோதா !
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாகி சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொது இடத்தில நடக்க, நீர் அருந்த, படிக்க, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட சாதியின் பேரில் இங்கு தடை இருந்தது.
ஜோதிராவ் பூலே, பெரியார், நாராயண குரு ஆகியவர்களின் போராட்டம், மற்றும் பெரியாரிய இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் போன்றவற்றின் காரணமாக பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு அடிப்படை உரிமை கிடைக்க தொடங்கியது. எனினும் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் சாதிய மனப்பான்மையே இருக்கிறது.
இப்படி சாதிய மனநிலை கொண்ட மக்கள் வெளிநாடு சென்றால் கூட தங்களோடு தங்கள் சாதி என்னும் மலத்தை எடுத்துச்சென்று வெளிநாடுகளிலும் சாதிய மனப்பான்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் இந்தியர்கள் பெருமளவில் குடியேறியுள்ள நிலையில், அங்கு இந்தியர்களின் சாதிய மனப்பான்மை குறித்த குற்றச்சாட்டு அடிக்கடி வெளிவருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தலைநகரமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகர சபையில் இந்தியாவின் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலும், சாதி,இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் , அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய-அமெரிக்கரும், சியாட்டில் நகர சபையின் உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் என்பவர், இந்த அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இது ஹோட்டல்கள், பொது போக்குவரத்து, சில்லறை நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் பணியமர்த்தல், பதவி உயர்வு மற்றும் ஊதியம் ஆகியவற்றில் சாதி அடிப்படையில் சிலர் பாகுபாடு காட்டுவதை சட்டம் தடை செய்யும். மேலும் வீட்டு வாடகை, சொத்து விற்பனை ஆகியவற்றில் நிலவும் சாதிய பாகுபாடுகளையும் இந்த சட்டம் தடை செய்யும்.
இந்த சட்டம் குறித்த விவாதம் சியாட்டில் நகர சபையில் நடந்துவந்த நிலையில், அங்கு அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாதி, மத, இன பாகுபாட்டை ஒழித்த முதல் அமெரிக்க நகரமானது சியாட்டில். இது குறித்த தகவல் வெளிவந்த நிலையில், பலரும் அந்த அமெரிக்க நகரத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்