Politics
பெண்களுக்கும் சொத்துகளில் உரிமை உண்டு .. இதே நாளில் தீர்மானம் கொண்டுவந்த பெரியார்.. செய்துகாட்டிய கலைஞர்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த அயலி இணைய தொடரில் பெண்கள் கல்வி கற்பதில் தொடங்கி அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநேக கொடுமைகள் வெளிவந்தன. 90-களில் நடந்த சம்பவமாக காட்டப்பட்ட அந்த தொடரிலேயே பெண்களுக்கு அத்தனை அநீதிகள் நடந்துள்ளது என்றால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு நிலைமை எப்படி இருந்திருக்கும்.
இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஒருகாலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான அடக்குமுறைகளை சந்தித்தார்கள். பெண்கள் கல்விகற்ற தடை, வெளியே செல்ல தடை, சொத்தில் உரிமை இல்லை என அத்தனை அநீதிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் காலம் செல்ல செல்ல இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளில் கல்வியால் தோன்றிய கருத்தாக்கம் காரணமாக அங்கு சீத்திருத்தவாதிகளின் கருத்தால் பொதுசமூகத்தில் மாற்றம் ஏற்பட்டு பெண்களுக்கான கல்வி, சொத்து போன்ற உரிமைகள் கிடைக்கத்தொடங்கின.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தோன்றிய பெரியாரின் கருத்தியல் தமிழக மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1929-ம் ஆண்டு பிப்ரவரி 17,18 செங்கல்பட்டில் பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு படிப்பதற்கு கூட உரிமை இல்லாத நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் மிக முக்கிய தீர்மானமாக பெண்களுக்கு சொத்தில் சம பங்கு அளிக்கும் தீர்மானம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதேநேரம் இதற்கு சனாதனவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை வழங்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக அம்பேத்கரின் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதன் காரணமாக தனது அமைச்சர் பதவியையே அம்பேத்கர் உதறினார். அதன்பின்னர் 1989-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ்நாட்டில் பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெரியார் மற்றும் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றினார். இந்த நிலையில், இரன்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் உச்சநீதிமன்றம் பூர்வீக சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை என்கிற வரலாற்று தீர்ப்பை வழங்கியது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!