Politics
ரூ.1 கோடி இருந்தால்தான் அதிமுகவில் சீட்.. ஆடியோ வெளியிட்ட OPS தரப்பு.. சர்ச்சையில் கே.பி. முனுசாமி !
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா- ஓ.பி.எஸ் தரப்பு என இரண்டாக பிரிந்த அதிமுக பின்னர், தினகரன் -ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தரப்பு என இரண்டானது.
அதன்பின்னர் ஒன்றாக இருந்த ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் தரப்பே இரண்டாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த இரு தரப்பின் மோதல் மூலம் அதிமுக வின் பித்தலாட்டங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பி.எஸ் தரப்பு புகார் தெரிவித்து இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்துள்ளார்.
அந்த ஆடியோவில் ரூ.1 கோடி இருந்தால்தான் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர முடியும் என கே.பி. முனுசாமி பேசுவதும், முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுவதும் பதிவாகியுள்ளது. மேலும் இந்த பணத்தை வாங்க தனது மகனை நேரில் அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுவதும் அதில் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அதிமுகவில் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் மூத்த தலைவர்களுக்கு ரூ.1 கோடி வரை தரவேண்டும் என்ற செய்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த ஆடியோ வைரலாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் அதிமுகவின் இந்த மோசமான செயலை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!