Politics
"கேரளாவில் அனைவரும் அமைதியாக வாழ முடியும், ஆனால் கர்நாடகாவில்?" -அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி!
கர்நாடகாவில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவ அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் விவகாரத்தில் அங்கு பாஜகவின் பெயர் பயங்கரமாக அடிவாங்கியுள்ளது.
இதனிடையே கர்நாடகாவின் புத்தூர் நகருக்கு சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அது பாஜகவால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது.இதைக் குறித்து நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறினார்.
அமித் ஷாவின் இந்த கருத்து கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா மாநிலத்தில் சமீபத்திய ஆண்டுகளில் மதம்,சாதி உள்ளிட்ட மோதல்கள் ஏதும் நடக்காத நிலையில், அதற்கு மாறாக பாஜக ஆளும் கர்நாடகாவில் சாதி, மத மோதல்கள் உச்சம் அடைந்து வருகிறது. கல்வி நிலையங்களில் கூட மதவாத வன்முறைகள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புஎழுந்துள்ளது .
இந்த நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது", பாஜகவால் தான் கர்நாடகாவை பாதுகாக்க முடியும் என்று சொல்வதன் மூலம் அமித் ஷா கூற வருவது என்ன ? கர்நாடகாவின் அண்டை மாநிலமாக கேரளா இருப்பதில் என்ன தவறு ?
கேரளாவில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும், மத நம்பிக்கை இல்லாத மக்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது... மதக் கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது.கர்நாடகாவில் சங் பரிவார் அமைப்பினரால் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. கேரளாவில் ஒற்றுமையாக மக்கள் வாழ்கிறார்கள். எனவே, கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்க வேண்டும்"என பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!