Politics
"பத்துவழிச்சாலையில் ஆறுவழிதான் இருக்கு 4 எங்கே போனது?"-வீடியோவால் சிக்கிய மோடி மற்றும் பாஜக முதல்வர் !
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அங்கு பெங்களூரு மற்றும் மைசூருவை இணைக்கும் 10-வழி" விரைவுச்சாலை பணிகள் நடைபெற்று வரும் மார்ச் மாதம் பிரதமர் மோடியால் திறக்கப்படவுள்ளது.
இந்த நெடுஞ்சாலை தொடர்பான ட்ரோன் காட்சியை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "என்ன அருமையான காட்சி ! 10-வழி பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் கர்நாடகாவின் வளர்ச்சியை சித்தரிக்கும் காட்சி. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜியின் கீழ், நமது இரட்டை எஞ்சின் அரசாங்கம் மாநிலத்தில் அதிசயங்களைச் செய்து வருகிறது." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி," எங்கள் மக்கள் சிறந்த உள்கட்டமைப்புக்கு தகுதியானவர்கள், அதை வழங்க எங்கள் அரசாங்கம் எப்போதும் கடினமாக உழைக்கும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வீடியோவையும் பாஜக அரசையும் பொதுமக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்ட வீடியோவில் 10 வழி சாலை என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் வெறும் 6 வழி சாலையே இருக்கும் நிலையில் மீதம் உள்ள 4 வழி சாலை எங்கே என்று இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், சிலர் 40% கமிஷனுக்கு பிறகு 10 வழி சாலை 6 வழி சாலையாக மாறிவிட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே கர்நாடக பாஜகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிகளவு கமிஷன் வாங்குவதாகவும், இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!