Politics
தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடிய பேனா: கிணற்று தவளை போல கூச்சலிட்டு வரும் கூட்டத்திற்கு பாடம் எடுத்த சிலந்தி!
அந்தப் பேனாவின் மகிமை அறியா சில 'ஏனோ தானாக்கள்' கிணற்றுத் தவளை போல வறட்டுக் கூச்சல்கள் எழுப்புகின்றனர்! அந்தப் பேனா நினைவுச் சின்னமல்ல: தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியின் சின்னம். ஆம்; அதிலிருந்து சிந்திய மைத்துளிகளால் தாழ்ந்த தமிழகம் தலைநிமிர்ந்தது. அந்தப் பேனா உதிர்த்தச் சொற்களால் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் பெற்றவர்கள் எண்ணிலடங்காதோர்!
‘உடன்பிறப்பே' - என்ற ஒற்றைச் சொல் மூலம் இலட்சோப லட்சம் தமிழ்ச் சொந்தங்களோடு நித்தம் நித்தம் உறவாடிய பேனா அது! இந்தித் திணிப்பால் தாய்த் தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால்,
‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்.... நீ
தேடிவந்த கோழையுள்ள நாடு
இதுவல்லவே!”
-எனப் போர்ப் பரணி வடித்து தமிழனின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்ற வைத்தப் பேனா:
“ஈட்டியின் முனைகளே!
தீட்டிய கூர்வாள்களே!
கட்டிய நாய்களல்ல நாம்
எட்டிய மட்டுமே பாய்வதற்கு
தட்டிய மாத்திரத்தில் தருக்கர்
கொட்டம் அடங்க வேண்டும்
பெரும் விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர்
அவர்வேண்டாம்
நெருப்பின் பொறிகளே! நீங்கள்தான் தேவை!”
- இன்னல் தமிழுக்கென்றால் எரிமலைக் குழம்பை மையாக்கி எழுதிய பேனா!
“வருணத்தை நிலைநாட்ட
வகையின்றி கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க
மறத்தமிழா போராடு!''
'கண்மூடிப் பழக்கமெல்லாம்
மண்மூடிப் போகட்டும்' - என்றெல்லாம் வருணாசிரமத்தின் கருவறுக்க - நெருப் பைக்கக்கிய பேனா!
“கலைஞரின் எழுத்துப் பரப்பை எண்ணிப் பார்க்க முயற்சி செய்வோமென்று ஒரு கணக்கிட்டோம். ஒரு நாளைக்குப் பத்துப் பக்கம் என்று எழுபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டோம். மொத்தம் ஏறக்குறைய 2,55,500 பக்கங்கள் என்று அளவிட்டோம். ஆனால், இந்தக் கணக்கு எங்களுக்கு அவ் வளவு சரியாகத் தெரியவில்லை. கலைஞரின் செயலாளர் செம்மல் சண்முகநாதன் அவர்கள் ஒரு நாளைக்கு இருபது பக்கங் கள் என்றல்லவா கணக்கிட்டிருக்க வேண் டும் என்றார். சில நிலைகளில் 50 பக்கங்கள் எழுதுவார் என்று ஒருமுறை விளக்கினார்” - என மறைந்த தமிழறிஞர். பத்மஸ்ரீ அவ்வைநடராசனைப் போன்றோரை மலைக்க வைக்குமளவு எழுதிக் குவித்த பேனா!.
14 வயதில் எழுதத்தொடங்கி 94 வயது வரை ஏறத்தாழ 80 ஆண்டுகள் பக்கம் பக்க மாக எழுதிக்குவித்த பேனா. போற்றுதற்கு ரிய பேரறிஞர்கள், தகைமைசால் தமிழா சான்கள், ஒளியுமிழும் தமிழ்க் கவிஞர்கள், அரசியல் மேதைகள், இசைப் பேரரசுகள் அனைவராலும் அதிசயத்து பாராட்டப்பட்ட பேனா!
‘“கனிகளிலே சாறெடுத்தல் போன்றே பண்டைக் காப்பியத்தில் தமிழ்ச்சாறு எடுக் கின்றாரே” - என்று உவமைக் கவிஞர் சுரதாவால் சுவைக்கப்பட்ட பேனா!
"நான் திரையுலகில் போடாத வேட மில்லை; காணாத புகழ் இல்லை அவற்றுக்கு ஆரம்பம் கலைஞர் என்ற பேனா வடித்த பெருமைக்குரிய எழுத்துக்கள்” - என நடிகர் திலகம் சிவாஜி நன்றியுணர் வோடு போற்றி புகழ்ந்த பேனா!.
“கலைஞரின் இலக்கியங்களைப் பற்றி அறிமுக உரை எளிதன்று. எந்த அளவில் எழுதினாலும் பெருமைக்கும், திறமைக்கும், மேன்மைக்கும் ஈடாகாது. எவரேனும் ஒருவர் அவர்போல் இலக்கி யக் கலை வடிவங்களில் எழுத முயன் றால் அதற்கு ஒரு பிறவி போதாது” - என வடமொழியினையும், தமிழினை யும் கற்றறிந்த மேனாட்டு அறிஞர் ஹார்டு, 'கலைஞர் களஞ்சியம்' பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார்; ஆம், அத்தகைய மொழி ஆராய்ச்சி அறிஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பேனா!.
“கோல்ட்ஸ்மித்” - என்ற ஆங்கிலப் பேரறிஞரைப் பற்றி ஜான்சன் என்ற திற னாய்வாளர் சொன்னதைப்போல, தமிழ்நாட் டில் ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால், அது கலைஞர் கருணாநிதிதான். அதாவது, அவர் தொடாத துறையே இல்லை. தொட்ட தைப் பொன்னாக்காமல் விட்டதும் இல்லை. இப்படிப் பேராசிரியர் அ.ச.ஞானசம் பந்தம் போன்ற பேரொளிகளையே பிரம்மிக்க வைத்த பேனா!
"எழுத்துக்கலை, செந்நாக்கலை, நாடகக் கலை, கவிதைக்கலை, அரசியற்கலை, எழிற்கலை என்றாங்கு பல்வேறு கலைகளிலும் நெஞ்சு அறிவு செயல் தோய்ந்த கலைஞர் இவரே" என டாக்டர் வ.சுப.மாணிக்கனார் நெஞ்சு நெக்குறுக வியந்து பாராட்டிய பேனா!
“கலைஞரின் எழுத்தில் இரண்டு உண்மைகள் தெரிகின்றன; ஒன்று. கவிதை மூலமா கப் புதிய தத்துவ விளக்கங்களைத் தருகி றார். மற்றொன்று, அவரது எழுத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை பெறுகிறார்" - என மிகச் சிறந்த கல்வியாளர் - பொருளியலாளர் மால்கம் ஆதிசேசையா போன்றோர் ஆராதனை செய்திட்ட பேனா!
'சொற்பிரவாகம்', 'சொல் வெள்ளம்’, 'சொற் பிரளயம்', 'சொல் சண்ட மாருதம்' என்றெல்லாம் சொன்னாலும் திருப்தி உண்டா கவில்லை. சொல்குண்டு மழை. அணுகுண்டு சொல்மாரி, எரிமலைச் சொற்பொழிவு என் றெல்லாம் சொல்லக்கூடிய விதமாக மனோ கரன் தீப்பொறி பறக்கும் காரசாரமான சொற்களைக் கொட்டித் தீர்க்கிறான், தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜசபைப் பேச்சு நல்ல எடுத்துக்காட்டு - என்று பெருங்கதைகள்,வரலாற்றுப் புதினங்கள் படைத்த பேரெழுத்தாளர், கல்கியையேவியக்க வைக்குமளவு சொற்போர்க்கோலம் கொண்ட பேனா.
“சீர் ஏற்றிய செந்தமிழுக்குக்
கூர் ஏற்றியது மூனா கானா பேனா.
நான் எழுந்து நின்றது அவரது
எழுத்தைப் பற்றி... எம்மனோர்க்
கெல்லாம் வாழும் தமிழாகவே
கலைஞர் பெருமான் விளங்குகிறார்”
எனப் பெருங்கவிஞர் வாலியும்,
“சமூகக் கொந்தளிப்புகளுக்குக் கவிதை கள் மூலம் எதிர்வினையாற்ற அவருடைய கவித்துவம் தனக்கே உரிய தனித்தன்மை யோடு கழன்று எரிவதைக் காண்கிறேன்” - என ஈரோடு தமிழன்பனும்.
“தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னுதாரணம் இல்லா முதல் உதாரண மாக முத்தமிழறிஞராக கலைஞர் திகழ் கிறார்" என்று கவிப்பேரரசு வைரமுத்து போன்ற கவி சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன் னர்களால் வியந்து வியந்து பாராட்டப் பெற்ற பேனா!
அந்தப் பேனாவின் சிறப்பு குறித்து பாராட்டுரைகளை தொகுப்பது என்பது, அந்தப் பேனாவே கூறியஉவமைபோல, இமயமலைக்கு பட்டாடை போர்த்தும்முயற்சியாகத்தான்இருக்கும்! தொகுக்கத் தொகுக்க விரிகிறது. அந்த புகழுக்குரிய பேனாவின் சாதனைகளில் சான்றோர் திளைத்து சுகம் கண்டு. திகைத்துவியந்து, சுவைத்து மகிழ்ந்து சூட்டிய புகழாரங்களில் சில துளிகளே மேலே காண்பது!
“சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்டு கொலுமண்டபத்தில் தனது வாதங்களை முன்வைத்தபோது.கண்ணகியின் எழுச்சிமிகு பேச்சையும். எச்சரிக்கையையும் மு.க. எடுத்துரைக்கும் போது மயிர்க் கூச்செறிகிறது.
கண்ணகியோடு நாமும் சேர்ந்து, அவர் காட்டும் சினத்திலும், பழிப்பிலும், குற்றம்சாட்டுதலிலும், எழுச்சியிலும் பங்கு கொண்டு பாராளும் மன்னன் முன் வாதாட வேண்டும் என்ற உணர்வை - உள்ளத்தை எழுச்சியை அந்தக் காட்சி உருவாக்கி விடுகிறது.
வெடிக்கிறது எரிமலை; கொந்தளிக் கூந்தல் மலர் இழந்த கைம்பெண் நீதி தேவதையாக மாறுகிறாள். இத்தகைய காட்சியை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரிய மல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் விஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்.
"பேசுங்கள்! கொவ்வைக்கனிவாய் திறந்து பேசுங்கள்; அத்தான்! ஒருமுறை பேசுங்கள் அத்தான். உங்கள் கண்ணகி வந்திருக்கிறேன் பேசுங்கள். அத்தான்...பேசுங்கள்!
கண்ணீர் கடலென ஓட கண்ணகி புலம்புகிறாள்; புலம்புகிறாள்! ஆனால் பதில் ஏதுமில்லை. கோவலன் கூடாகி விட்டான். நீங்கள் பேச வேண்டாம். உங்களுக்காக இந்த உலகத்தையே பேசச் செய்கிறேன்”
- என்று கூறிய கண்ணகி உலகத் தையே பேச வைத்தார்! அவர் காலத்து உலகை மட்டுமல்ல; நிகழப்போகும் காலத்து உலகை எல்லாம் பேச வைத்தார்!
இப்படி கருணாநிதி ஒரு காவியப் படைப்புக்குத் தேவையான செழுஞ் சொல்லோட்டத்தை. சீரிய அழகு அமைப்பை உருவாக்கியுள்ளார்.”
இப்படி தென்னாட்டு பெர்னாட்சா பேரறிஞர் அண்ணாவையே சிலிர்க்க வைத்த பேனா!
அந்தப் பேனாவின் மகிமை தெரியாத ஒருதற்குறி கூட்டம், கலைஞர் நினைவிடத்தில் பேனாவை நினைவுச்சின்னமாக அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது!
"பனிமுட்டை அடைகாக்கும் பசும்புல்லின் தரை....”
"போய் விட்டாயா
காரா?"
போர்வாள் மீசைக்
"புவிப் பெண்ணாள் கழுத்தினிலே புரளு கின்ற முத்து வடம் தென்னாடு”
“குவிக்கின்ற கரம்போல இலங்கைத்தீவு” “காலைக் கதிரவன் போல் கை சிவக்கக் கொடை வழங்கும் காவலர்கள் வாழ்ந்தி ருந்த தமிழ்நாடு"
“கண்ணுக்குள் பாவை போல இலங்கைத் தீவு கருவிழிதான் ஆழ்கடல்கள்”
"நுரை கடலில் பருவநாளில் உயர்கின்ற அலைபோல தரை மீது காலூன்றித் தாவிப் பாய்ந்தான்" என சொல்லுக்குச் சொல் உவமைகளின் சதிராட்டம் சமைத்த பேனா அது! அந்தப் பேனாவுக்கு எதிர்ப்பா? எதிர்ப் பாளர்களே: தமிழின விபூடனர்களே. எந் தத் தலைவனுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்க்கிறீர்கள்; தெரியுமா?
தந்தை பெரியார் விருப்பத்தை நிறை வேற்ற அன்னை மணியம்மையார் நிறுவிய தன் சிலையை சில தற்குறிகள் எம். ஜி.ஆர். மறைந்த அன்று அண்ணாசாலை யில் வைக்கப்பட்டிருந்த சிலை உடைக்கப்பட்டபோது.
“உடன் பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலேதான் குத்துகிறான் அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க! வாழ்க!!”
என தனது சிலையை கடப்பாறை கொண்டு தகர்த்தவர்களையும், அவர்களும் தமிழர்கள்தானே... என்ற உணர்வோடு. புறநானூற்று தாயின் சிந்தனை யோடு. உடைத்தவர்கள்மீது
வெறுப்புமிழாது,
அணைத்த கரம் பற்றியிருந்த பேனா; அது!
உணர்வீர்; தெளிவீர்!
- சிலந்தி
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!