Politics
“உங்களுக்கும் எங்களுக்கும் பஞ்சாயத்து வேண்டாம்..” - ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி. !
"பொதுப்பள்ளிக்கான மாநில மேடை" குடியரசு நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் அரங்க நூலக கட்டிடத்தில் நடைபெற்றது.
அரசியலமைப்பு சட்டத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை காத்திடுவோம். நீட் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, மருத்துவர் செந்தில் குமார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவரும் பேராசிரியருமான ப. ரத்தினசபாபதி, பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி எம்.பி. மேடையில் பேசும்போது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "நம்பிக்கையை தரக்கூடிய ஒரு காட்சியாக இந்த நிகழ்வு உள்ளது. நாளைய சமூகம் என்பது நிச்சயம் எழுச்சி பெறக்கூடிய, கேள்வி கேட்க கூடிய ஒன்றாக இங்கு, மாணவர்கள் வருகை உள்ளது.
துணை குடியரசு தலைவர் மிக முக்கிய கருத்தை சமீபத்தில் எடுத்துரைத்துள்ளார். அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என துடிக்கும் அவர்களுக்கு அந்த கருத்து சரியானதாக இருக்கும்.
நம் உரிமைகள் அதிரடியாக நம்மிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. பிபிசி வெளியிட்டுள்ள ஆவண படத்தை பார்க்க மாணவர்களுக்கு உரிமை இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், எதையும் யாரும் தடுக்க முடியாது. ஒரு செயலை பார்க்கக்கூடாது என்றால், அதனை உடனடியாக பார்க்கும் நிலையை அவர்களே உருவாக்குகின்றனர். இருவேறு மாறுபட்ட கருத்துடையவர்கள் இந்த சமூகத்தில் வாழ உரிமை உண்டு.
எத்தனையோ போராட்டங்களை கடந்துதான் பெண்கள் படிக்கும் சூழல் இருந்தது. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதுதான் ஜனநாயகத்தில் மாற்றம் வரும். எந்த கருத்து பரிமாற்றமோ, எதிர்க்கருத்தோ இல்லாத சூழலில், தான் சொல்லுவது மட்டுமே நியாயம் என்ற நிலையை உருவாக்கும்பொழுது, ஜனநயாகம் சுதந்திரம் என்ற சொல்லும் வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லாத சூழல் உருவாகி விடுகிறது.
யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை கூட தற்போது மக்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒன்றிய அரசு தொடர வேண்டுமா, அதற்கான நியாயங்கள் உள்ளதா என்பதை நாம் அடுத்த மாநிலங்களுக்கு கொன்டு செல்ல வேண்டும்.
யாருடைய கருத்துகளும் நாடாளுமன்றத்தில் செவிமடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம். எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போதும், பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள். உங்களுக்கும், எங்களுக்கும் பஞ்சாயத்து தேவையில்லை. எங்கள் *குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
காசியில் தமிழ் சங்கமம், பட்ஜெட்டில் திருக்குறள் உரை சொல்லுவீர்கள். தமிழ் சங்கமம் நடத்துகிறோம் என தமிழ்நாட்டில் இருந்து யாரையும் அழைக்காமல் சங்கமம் நடத்தினர். தமிழ் சங்கத்திற்கு தமிழ்நாட்டில் அரசு பிரதிநிதிகளை கூட அழைக்காமல் நடத்துகிறீர்கள். அதற்காக தான் அரசு சார்பாக சென்னை சங்கமத்தை நடத்தி காட்டினோம்.
கடந்த 8 ஆண்டில் தமிழுக்கு ஒன்றிய அரசாங்கம் செலவழித்துள்ள தொகை 74 கோடி மட்டுமே. பல மாநிலங்களில் இந்தி படித்தால் எங்கயோ போயிடலாம் என சொல்கிறார்கள். ஆனால், இந்தி இருக்கும் மாநிலங்களில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளார்கள்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!