Politics
“அடடே ! இவரு Fitnessக்கு இதுதான் காரணமா ?” - உணவு பழக்கம் குறித்து ராகுல் காந்தி சொன்ன Secret ! VIDEO
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். குமரியில் தொடங்கிப்பட்ட இந்த யாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
குமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தை செப்டம்பர் 11 ஆம் தேதி கேரள எல்லையில் தொடங்கினார். அங்கு 18 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டார்.
கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கையும் கர்நாடகாவில் இருந்தபடியே செலுத்தினார்.
தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி என பல மாநிலங்களை கடந்து தனது நடைப்பயணத்தை தற்போது காஷ்மீரில் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யாத்திரையின் போது ராகுல் காந்தியிடம் தனியார் ஊடகவியலாளர் ஒருவர் அவருக்கு பிடித்த உணவுகள் குறித்தும், டயட்டுகள் குறித்தும் கேட்டார்.
அப்போது அதற்கு பதிலளித்த அவர், "உணவு விஷயத்தை பொறுத்தமட்டில் இதுதான் வேண்டும் என்று இல்லை; என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடுவேன். ஆனால் எனக்கு அசைவ உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், கடல் சார்ந்த உணவுகள், சிக்கன் டிக்கா, கெபாப்ஸ், ஆம்லேட் எல்லாம் மிகவும் பிடிக்கும். ஆனால் பட்டாணி, பலாப்பாழம் மட்டும் நான் விருப்பப்பட்டு சாப்பிட மாட்டேன். அதே நேரத்தில் காலையில் ஒரு கப் காபி குடிப்பேன்.
வீட்டில் இருந்தால் உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். கார்போஹைட்ரேட் உணவை அறவே தவிர்ப்பேன். 'அரிசி அல்லது ரொட்டி' இரண்டில் எது சாப்பிட வேண்டும் என்றால், நான் ரொட்டியை தேர்ந்தெடுப்பேன். அதோடு எப்போதும் ஏதாவது ஒரு வகையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவேன். தற்காப்பு கலை தவிர, எனக்கு டைவிங் தெரியும்; யாத்திரையிலும் வழக்கமான தற்காப்பு கலை வகுப்புகளை எடுத்து வருகிறேன்" என்றார்.
மேலும் தனக்கு நேரம் வரும்போது திருமணம் செய்வேன் என்றும், திருமணம் செய்யப்போகும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை என்றும்; அன்பாக அறிவாக இருந்தால் மட்டுமே போதும் என்றும் தெரிவித்தார். அதோடு தான் பிரதமரானால், கல்வி முறையை மாற்றியமைப்பேன், நடுத்தர வணிகங்களுக்கு உதவுவேன், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் உட்பட கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஆதரவாக நிற்பேன் என்றார்.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?