Politics
நாங்கள் வறுமையிலிருந்து மீட்ட மக்களை நீங்கள் வறுமையில் தள்ளியுள்ளீர்கள்-மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!
கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அதோடு பங்கு சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே காரணங்களால் உலகத்தின் பெரும் பணக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் நாளுக்கு நாள் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவது பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளிவந்துள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பிரிட்டனை சேர்ந்த 'ஆக்ஸ்ஃபேம் இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு இந்தியாவின் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்றும், அடித்தட்டு மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே உள்ளது அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை குறிப்பிட்டு மோடியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "70 கோடி இந்தியர்களை விட 21 கோடீஸ்வரர்களிடம் அதிக சொத்து உள்ளது. 1% பணக்காரர்களிடம் தான் இந்தியாவின் 40% செல்வம் இருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 20 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டது. ஆனால், பிரதமரின் கொள்கைகள் அவர்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!