Politics
சமூக நீதி,மதச்சார்பின்மையில் நம்பிக்கை இல்லா ஆளுநர் தமிழ்நாட்டில் என்ன செய்கிறார்?Times Of India காட்டம்!
தமிழ்நாட் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறியது அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புகழ்பெற்ற டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழும் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாளிதழில் வெளியான செய்தியில், " சட்டசபை கூட்டத்தின் இருந்து வெளிநடப்பு செய்த சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் என்ற அவப்பெயரை ஆர்.என்.ரவி பெற்றுள்ளார். இங்கிலாந்தில் இறையாண்மை கொண்டவர் மன்னர். எனவே அவர் பாராளுமன்றத்தை திறந்து வைக்கிறார். இதன் காரணமாக அங்கு அவர் முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால், இந்தியாவில் சட்டமன்றம் அதன் இறையாண்மையை குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரிடம் இருந்து பெறாமல் அரசியலமைப்பிலிருந்து பெறுகிறது. எனவே, ஆளுநரின் பதவி சம்பிரதாயமானது
நமது அரசியலமைப்பு அமைப்பில் ஆளுநரின் பங்கு என்ன? ஆளுநர்கள் சுதந்திரமாக செயல்பட முடியுமா அல்லது அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்படுகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசைக் கலவரப்படுத்தவோ, தாக்கவோ அல்லது கலைக்கவோ ஆளுநரை ஏஜெண்டாகப் பயன்படுத்திக் கொள்வது அரசியலில் புதிதல்ல. இது குறித்த வழக்கில் அரசியலமைப்பு பெஞ்ச், மாநில அரசின் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு எப்போதும் ஆளுநர்கள் கட்டுப்படுவார்கள் என்று தீர்ப்பளித்தது.
மற்றொரு வழக்கில் அனைத்து நிர்வாக செயல்பாடுகளும் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், இணையான நிர்வாகத்தையோ அல்லது அரசாட்சியையோ நடத்த ஆளுநர் முயற்சிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. மாநிலத் தலைநகரங்களில் அமர்ந்து மத்திய அரசின் ஏஜெண்டாகச் செயல்படும் ஆளுநர், ஒன்றியில் அரசை எதிர்க்கும் கட்சி கையில் இருக்கும்போது மாநில அரசைக் கவிழ்க்க வாய்ப்பு தேடுவது கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் என்று சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது. .
நமது ஜனநாயகத்தில் ஆளுநர்களின் பங்கு பற்றி நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கு மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான சமீபத்திய முட்டுக்கட்டைகள் சாட்சியாக நிற்கின்றன. செப்டம்பர் 2021 இல் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் ஆளும் கட்சியான திமுகவுடன் தொடர்ந்து சித்தாந்த மற்றும் அரசியல் போரை நடத்தி வருகிறார்.அவர் மாநிலத்தின் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் நீண்டகால நம்பிக்கைகள், சித்தாந்தம் மற்றும் தத்துவம் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது தொடர் தவறான செயல்களில் கடைசி செயலாக மாநில சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆற்றிய உரை இருந்தது.
அரசியலமைப்பு மரபு என்னவென்றால், வரைவு அறிக்கையை முன்கூட்டியே தயார் செய்து ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்புகிறது. பின்னர் அதில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், முதல்வர் மற்றும் ஆளுநரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பிறகு ஒரு நகல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரால் வாசிக்கப்படுவதற்கு முன், அவையின் ஒவ்வொரு உறுப்பினரின் முன் வைக்கப்படுகிறது. மாநில அரசின் உரை, ஜனவரி 5ம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஜனவரி 7ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் சாசனம், சட்டம், மரபுகளை மீறி வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை தவிர்த்துவிட்டு, மாநில அரசின் ஒப்புதல் பெறாத அறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளை ஆளுநர் படித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை விதிகளின் விதி 17ன் கீழ், எந்த உறுப்பினரும் ஆளுநர் உரையைத் தடுக்கவோ அல்லது குறுக்கிடவோ கூடாது. முதல்வர் தனது உரையை ஆளுநர் முடிக்கும் வரை காத்திருந்தார், பின்னர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆளுநர் மற்றும் மாநில அரசு ஒப்புதல் அளித்த உரையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை முன்வைத்தார். சபை ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் முடிவடைவதற்குள் சட்டசபையை விட்டு வெளியேறியதன் மூலம் ஆளுநர் சபையை அவமதித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தலைவரால் மக்களின் விருப்பத்தை முறியடிக்க முடியுமானால், அது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் செயலாகும்.
சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உருவான திராவிட இயக்கத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு. ஆளுநர் உரையில் விடுபட்ட மற்ற வார்த்தைகளைப் பார்த்தால், அவரது மனநிலையின் நிலை அனைவர்க்கும் தெரியும். ‘சமூக நீதி’, ‘சுயமரியாதை’, ‘வளர்ச்சி’, ‘சமத்துவம்’, ‘பெண்கள் அதிகாரமளித்தல்’, ‘மதச்சார்பின்மை’, , ‘திராவிட ஆட்சி முறை’ போன்ற வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆளுநர் ரவிக்கு சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்கள் அதிகாரம், மதச்சார்பின்மை, திராவிட ஆட்சி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? " என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!