Politics
“தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும்..” - ஆளுநரை விளாசிய கே.எஸ். அழகிரி !
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் நடத்தும் மாநில அளவிலான ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதுமிலிருந்து சுமார் 150 பேர் பெங்கேற்றுள்ளனர். போட்டியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பது என்பது நமக்குத் தான் தெரியும். ஆளுநர் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழகம் என்பதற்கும் தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு.
தமிழ்நாட்டைப் போலத்தான் ஆந்திரா ஒரு நாடு, பஞ்சாப் ஒரு நாடு, கேரளா ஒரு நாடு இவற்றையெல்லாம் உள்ளடக்கியது தான் இந்தியா. நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம். இந்தியா என்பது ஒரு தேசம். ஆளுநர் ஒன்றை சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டிய விஷயத்தை சொல்வதற்காக தான் இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இது பெரிதளவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'தமிழ்நாடு' என்ற ஒற்றை சொல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு புகழ் குறித்து ட்விட்டர் பக்கத்தில் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்தனர்.
மேலும் அறிஞர் அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தருணம் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதோடு ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், ஆளுநருக்கு எதிராக 'ரம்மி ரவி' என்ற ஹேஸ்டேக்கையும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!