Politics
‘உங்க அக்காவ பத்தி இப்படியெல்லாம் பேசுவீங்களா’: BJPயின் கேவலமான அரசியல் பற்றி பேட்டி தந்த காயத்ரி ரகுராம்
தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலை சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களும் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
கே.டி.ராகவன் தொடங்கி, திருச்சி சூர்யா வரை பா.ஜ.க முக்கிய புள்ளிகள் மீது சொந்தக் கட்சி பெண் நிர்வாகிகளே புகார் அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்து பா.ஜ.க நாறிக் கிடக்கிறது. இது எல்லாம் ஒரு கட்சியா? என்று பெண்களே பேசும் அளவிற்குத் தமிழ்நாட்டு பா.ஜ.க உள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என கூறி காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் விலகியுள்ளார். இவர் கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்ததால் அவர் ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில்தான் பா.ஜ.கவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காத்ரி ரகுராம்," பா.ஜ.கவில் கடந்த ஒரு வருடமாக ஹனிட்ராப் எனும் புதிய விஷயம் வந்துள்ளது. இது ஒரு பெண்ணுக்கு ஆபத்தானது. துபாய் ஹோட்டலில் நான் ஹனிட்ராப் செய்தேன் என 150 பேருக்கு முன்னால் அண்ணாமலை தவறாகப் பேசினார்.
அவர் என்னை அக்கா என்று அழைக்கிறார். அக்காவை இப்படி தவறாக 150 பேர் முன்னாள் இப்படிதான் அண்ணாமலை பேசுவாரா?. இவரால் என்னைப் பற்றி நிறைய பேருக்குத் தவறான எண்ணங்கள் தோன்றிவிட்டது.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கட்சி தலைமையிடம் கேட்டிருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலிசா அப்துல்லா, திருச்சி சூர்யா டெய்சி பிரச்சனை வந்தபோது கட்சி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.
ஆனால் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பே கொடுக்கவில்லை. நான் தனியாகத்தான் செய்தியாளர்களைச் சந்தித்து எனது தரப்பு நியாயத்தைக் கூறிவருகிறேன். கட்சியிலிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லாததால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே பா.ஜ.கவில் இருந்து விலகினேன். கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பா.ஜ.கவில் நிறையப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?