Politics
பள்ளி பாட புத்தகத்தில் பகவத் கீதை.. ஒன்றிய அரசின் அடுத்த சதி: கல்வியாளர்கள் எதிர்ப்பு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே கல்வியில் இந்துத்துவா கொள்கையை எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களைப் பாடத்திட்டங்களில் நுழைத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிகளை பா.ஜ.க எடுத்து வருகிறது.
மேலும் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் மற்றும் சமூக நீதி குறித்துப் பேசியவர்களைப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி வருகிறது. இப்படி பள்ளி பாடத்திட்டங்கள் தொடங்கி பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வரை தனது இந்துத்துவா சித்தாந்தங்களைப் புகுத்திட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக இந்துத்துவா கருத்துகள் கொண்டவர்களைக் கல்வி அதிகாரிகளாக நியமித்து தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் கர்நாடகாவில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த சமூக சீர்திருத்த வாதிகள் தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் குறித்த பாடங்களை நீக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டது சர்ச்சையானது.
அதேபோல் CBSE 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசப்பட்டது. அதேபோல் 2ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகையை கொச்சைபடுத்துவோன்ற கருத்துக்களை இடம் பெற்றது. இப்படி தொடர்ந்து சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு மற்றும் இந்துத்துவா கருத்துக்களை ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் முதல் கல்லூரி வரை புகுந்த பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.
அதேபோல் குலக்கல்வித் திட்டத்தின் மறு வடிவமான தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து ஒட்ட மொத்த கல்வியையே அழிக்க பா.ஜ.க அரசு தனது சதித்திட்ட வேலைகளை செய்து வருகிறது. பா.ஜ.க அரசின் இந்த காவிமய கல்விக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து, கல்வியில் காவி புகுந்துவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி பாடப் புத்தகங்களில் பகவத்கீ தையை சேர்ப்பது குறித்து ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பா.ஜ.க MP விவேக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில் "பள்ளிப் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். 11 மற்றும் 12ம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகங்களில் பகவத்கீதையின் ஸ்லோகங்களையும், வேதங்களில் உள்ள அறிவையும் சேர்க்க வேண்டும்.
அதேபோல் 6 மற்றும் 7ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் பகவத்கீதையின் குறிப்புகள் இணைக்கப்பட வேண்டும். இந்த நூற்றாண்டில் அறிவு சக்தியாகமாற நாம் நமது பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த அறிக்கைக்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!