Politics
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் ஆம் ஆத்மி.. 15 ஆண்டுகளுக்கு பிறகு மண்ணை கவ்விய பா.ஜ.க!
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. 50.48% வாக்குகள் பதிவாயின. மொத்தம் 1.45 கோடி வாக்காளர்களில் 73 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இத்தேர்தலில் 709 பெண்கள் உட்பட 1349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், 250 வார்டுகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி, 106 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும 26 வார்டுகளில் முன்னிலையில் உள்ளனர். சுல்தான்புரி வார்ட்டில் ஆம் ஆத்மியின் பாபி என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் பா.ஜ.க 69 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றியும், 5 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 126 வார்டுகளில் ஆம். ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் டெல்லி மாநகராட்சியை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து ஆம்ஆத்மி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!