Politics
21 சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநர்: மக்கள் கூடும் இடங்களில் பேனர் வைத்து அம்பலப்படுத்திய திமுக MP!
மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில். ஆளுநர்களை வைத்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர்களை வைத்து விளையாட்டு காட்டி வருகிறது பா.ஜ.க அரசு.
ஏன், ஒரு மாநில அமைச்சரையே பதவி நீக்க கோரி உத்தரவிடும் வகையில் ஆளுநர் நடந்துக்கொள்ளும் கொடுமையெல்லாம் கேரளாவில் நடந்துள்ளது. அதேவேளையில் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தக் கொள்கைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவருவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, மாநில மக்களின் நலன் கருதிக் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடைப்பில் போடு வைத்துள்ள அவலமும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்டமசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இந்த சட்டமசோதாக்களை விரைந்து அனுப்பிவைக்கக் கோரி, கடந்த ஜூன் 2ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆளுநர் ஆர்.என். ரவி முன் காத்திருக்கும் 21 சட்ட மசோதாக்கள் என்னென்ன இங்கு பார்ப்போம்:-
1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)
2. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)
3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2022. சில விதிகளைத் திருத்தவும், பதவிக் காலத்தைக் குறைக்கவும்)
4. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022. (உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).
5. சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும்)
6. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022, (சென்னைக்கு அருகில் தனி சித்த பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் ).
7. தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் (இரண்டாம் திருத்தம்) மசோதா, 2022. (மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு)
8. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2022 , (பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).
9. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022. ( ஆங்கிலோ இந்திய சமூகம்)
10. தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்த மசோதா, 2022.
11. தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, 2022.
12. தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தம்) மசோதா, 2022 (துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்)
13. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022
14. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) மசோதா, 2022
15. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022
16. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022
17. தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் (திருத்தம்) மசோதா, 2022.
18. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022 (பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).
19. தமிழ்நாடு ரத்துச் சட்டம், 2022 (காலாவதியான மற்றும் தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய).
20. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்)
21. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022 (உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல்) - ஆகியவைதான் நிலுவையில் உள்ளவை ஆகும்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டிக்கும் வகையில், புதுக்கோட்டை எம்.பி., எம்.எம்.அப்துல்லா அறிவுறுத்தலின் படி பேனர் வைக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்தப்பேனரில் 21 சட்ட மசோதாக்களையும் பட்டியலிட்டு, இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விடுத்தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும். எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!