Politics
வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்கள் இருக்கக்கூடாது -அதிகாரிகளுக்கு வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி கடிதம்
வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்கள் கட்டாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், கட்டிடம் மட்டும் மனை பிரிவின் அனுமதி அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்ததில், “தமிழகம் முழுவதும் பல கட்டிடங்கள் வரைபட அனுமதி பெறாமல் மிக நீண்ட காலமாக உள்ளது. காரணம் அந்த நேரத்தில் அதற்கான புரிதல் இல்லை, அதன்பின் வரன்முறை திட்டம் கூட அதை பற்றி பெரிய அளவில் மக்களுக்கு தெரியவில்லை.
தற்போது கூட பொதுமக்களுக்கு இதன் முக்கியதுவத்தை மிக பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது. எனவே கட்டுமான நிறுவணங்களின் சங்கங்கள், பொறியாளர்களின் சங்கங்கள், கட்டிட வடிவமைப்பாளர் சங்கங்கள் - போன்ற கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு சம்மந்தப்பட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்து செல்ல வழிவகை செய்யலாம்.
கட்டிட அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் மிக நீண்ட நாட்களாக உள்ளதால் அதற்கு தற்போது உள்ள விதிகளின்படி தீர்வை ஏற்படுத்தி விட முடியாது. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் அந்த வகையிலேயே உள்ளது.
எனவே, இது சம்மந்தமான உண்மை நிலையை உச்ச நீதிமன்றத்திற்கு அரசு மூலமாக மனு செய்து ஒரு தீர்வை பெற முயற்சிக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் மறு வரையறை செய்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பை பெற்றுவிட்டால் போதும் முழு தீர்வையும் கண்டு விட முடியும்.
அது பயன்படுத்தவில்லை என்றால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பொதுமக்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்கிற வகையில் அரசு சார்பாக செய்தியை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அபராத தொகை என்பதை மிக குறைவாக நிர்ணயித்து அனைவரும் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும்.
இனிமேல் மாநிலம் முழுவதும் வரைபட அனுமதி இல்லாத கட்டிடங்கள் எதுவும் வராமல் பார்த்துக்கொள்கிற நடவடிக்கையை சம்மந்தப்பட்ட துறைகள் கண்டிப்பாக எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ளும் என்ற உத்திரவாதத்தை உச்ச நீதிமன்றத்திற்க்கு கொடுக்கலாம்.
எனவே, மேற்கண்டவை சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு தெளிவான கருத்துரையை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழுவின் பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் நம்முடைய கோரிக்கை மேலும் வலுப்பெறும் என்று கருதுகிறேன்.
இந்த இரண்டு கருத்துக்கள் பற்றி துறை ஆய்வு செய்து கோப்பை சுற்றனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!