Politics
தான் மெத்த அறிந்த மேதை போல பேசி.. பொறியில் சிக்கிய எலிபோல திண்டாடும் தமிழக ஆளுநர்: சிலந்தி தாக்கு!
முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் வார்த்தைகளை உதிர்க்கும் போது, மிகவும் எச்சரிக்கையாக உதிர்த்திட வேண்டும், பின் விளைவுகளை எதிர்நோக்காது உதிர்த்திடும் வார்த்தைகள் "பூமராங்" போன்றது. உதிர்த்த வார்த்தைகளே, சென்ற வேகத்தில் திரும்ப வந்து, உதிர்த்த நபரையே தாக்கி நிலைகுலைய வைத்துவிடும் என்பதனை ஆளுநர் ரவி உணராது, தான் மெத்த அறிந்த மேதை போல பேசி, பல நேரங்களில் பொறியில் சிக்கிய எலிபோல திண்டாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
கோவையில் கடந்த அக்டோபர் 23ந் தேதி விடியற்காலை 4.30 மணி அளவில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்து, சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி வருகிறது! சிலிண்டர் வெடித்ததாக முதல் செய்தி வந்தாலும், கார் உருக்குலைந்துள்ள நிலையையும் - வெடித்த சத்தத்தையும் வைத்து காவல் துறை விசாரித்தபோது, காரில் வெடி மருந்துகள் இருந்திருக்கலாம் எனச் சந்தேகித்து, உடனே நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.
வெடிமருந்துகள் பயன்பாடு. சதித்திட்டம் போன்றவை இவ்விபத்து தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு விரை வில் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஏடுகளில் அப்போதே செய்திகள் வெளி வந்தன.
இந்த வழக்கில் பிற மாநில தொடர்புடையவர்கள் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பு இருப்பதா லும். வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டும். தமிழகமுதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் உடனடியாக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி. வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்குப் பரிந்துரைத்தார்!
இங்கே முக்கியமாக கவனிக்கத்தக்கது; கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. அக்டோபர் 23 விடியற்காலை 4.30 மணிக்கு!என்.ஐ.ஏ.விடம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. அக்டோபர் 26-ந் தேதி. இடையிலே இரண்டே நாட்கள் இடைவெளிதான்! தமிழக அரசு அதிகார பூர்வ அறிவிப்பு 26-ந் தேதி காலை வெளி வந்தாலும், சம்பவம் நடந்த மறுநாளே, என்.ஐ.ஏ., சம்பவக்களத்தில் இறங்கிவிசாரணை மேற்கொண்டதாகவும் செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன! இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு எதிராகத் தனது அரசியலை நடத்திடத் தொடங்கினார்.
கோவைக்குச் சென்று அங்கு நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, "என்.ஐ.ஏ. விசாரணைக்கு நான்கு நாட்கள் தாமதமாக தமிழக அரசு பரிந்துரைத்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியது மட்டுமின்றி. இந்தத் தாமதத்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அரிய பெரிய கண்டு பிடிப்பை வெளியிட்டார். பின்னர் அவரது அதிகார பூவர்வமான ட்விட்டர் பக்கத்தில் வந்த செய்தில், கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்களை அழிப்பது குறித்து ஆளுநர் ரவி கலை தெரிவித்தார். அவர் தமிழகக் காவல் துறையைப் பாராட்டினார் என்று கூறப்பட்டிருந்தது. இதனை ஏடுகள் எல்லாம் பெரிதாக வெளியிட்டன!
கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்தபின் தமிழகக் காவல்துறை - என்.ஐ.ஏ.வுடன் கலந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்பது தமிழக அரசு சார்பில் விளக்கப்பட்ட பின்னும், ஆளுநர் ரவி இந்தக் கருத்தை திரும்பத் திரும்பக் கூறியது, எதோது உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டுள்ளது.
இரண்டே நாள் இடைவெளிக்குப்பின் இந்த விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பதாக அறிவித்த நிலையில் ஆளுநர் தவறான கருத்தை பொது மேடையில் பேசியது மட்டுமின்றி, அதனைஉறுதிப்படுத்தும் வகையில் தனது ‘ட்விட்டர்’ பதிவிலும் வெளியிட்டது சர்ச்சையானது!
ஆளுநர் ரவி ஏதோ உள்நோக்கோடு, தமிழக அரசின் செயல்பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது போல பேசியதை, பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர்!
இந்த நிலையில்தான், கருநாடக மாநிலம் மங்களூரில் ஒரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்தது ! கோவை சம்பவம் போல இந்த வெடிப்பின் பின் னணியில் பயங்கரவாத சதி இருப்ப தாகக் கூறப்பட்டு விசாரணை முடுக்கப்பட்டது! இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க கருநாடக போலிஸ் வேட்டையைத் தொடங்கியது!
கருநாடக மாநிலத்தை ஆண்டு கொண்டிருப்பது பி.ஜே.பி! திரு.ரவியை தமிழகத்துக்க ஆளுநராக சிபாரிசு செய்த ஒன்றிய அரசை ஆளும் கட்சி! மங்களூரில் (கர்நாடகா) இந்த வெடி விபத்து நிகழ்ச்சி நடைபெற்றது! இந்த நிகழ்வு நடந்தது. கடந்த சனிக்கிழமை மாலை! அதாவது நவம்பர் 19ந் தேதி!
இதனைப் புலனாய்வு செய்ததில், கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கும் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.
இது குறித்து நவம்பர் 21ந்தேதி சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை (health) அமைச்சர் சுதாகர். "இது ஒரு கொடூரமான பயங்கரவாத வன்முறை: அதனால் கர்நாடக அரசு இதனை பல கோணங்களிலும் கவனித்து வருகிறது"- எனப் பேட்டி அளித்தார்!
பின்னர் சனிக்கிழமை நடந்த சம்பவம் - ஏறத்தாழ 6 நாட்கள் கடந்த பின் நவம்பர் 24ந் தேதி வியாழனன்று என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளதாகவும் 25ந் தேதி காலை செய்தித்த்தாள்களில் செய்தி வெளிவந்துள்ளது!
தமிழ்நாட்டில் கார் வெடிப்பு சம்பவத் துக்கு, அது நடைபெற்று இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் என். ஐ. ஏ. விசார ணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில், “இந்தத் தாமதத்தால் ஆதா ரங்கள் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு" என்று பேசினார் ஆளுநர்!
இப்போது கருநாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா அரசு. ஏறத்தாழ 6 நாள் இடைவெளிக்குப் பின் அந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைத்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளதே: அங்கே ஏற் பட்ட இந்தத் தாமதத்தால், ஆளுநர் ரவி யின் கூற்றுப்படி, 'பயங்கரவாத சதித்திட் டத்தின் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப் பட்டிருக்காதா?'
தமிழ்நாட்டில் இரண்டு நாள் இடை வெளி எடுத்ததால் பயங்கரவாத சதித் திட்டத்தின் முக்கிய ஆதாரங்கள் அழிக் கப்பட வாய்ப்பு அளித்துவிட்டது போல. பேசிய ஆளுநர் ரவி, கர்நாடகத்தில் 6 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு. வழக்கை என்.ஐ. ஏ.விடம் ஒப்படைத் துள்ளார்களே: அப்படியானால் அந்த மாநில அரசு செயல் குறித்து என்ன சொல்வார்? என்ன சொல்லப் போகிறார்?
தமிழகத்தின் ஆளுநராக, சில 'அஜண் டா'க்களுடன் அதாவது திட்டங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டவர் ரவி. அவை களை நிறைவேற்றும் நோக்கில் செயல் படத் தொடங்கும் போதெல்லாம் "உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா புயல் அடிக்குது" எனும் போக்கில் எல்லாமே நடந்து விடுகிறது! அப்படித்தான் இந்த கார் வெடிப்பு சம்பவத்திலும் நடந்து விட்டது!
தமிழகத்தின் கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து, தமிழக அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ரவி. ஆனால், கர்நாடக நிகழ்வுகள் அவரது கனவைத் தூளாக்கிவிட்டது. மாவு விக்கலாம் எனக் கூடையை தூக்கிய நேரத்தில், இப்படிப் புயல் உருவாகிவிடும் என ஆளுநர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
"நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
அதனாலே முழிக்குதே அம்மாப் பொண்ணு"
என்ற திரைப்பட பாடல் போல, ஆளுநர் ரவியின் நிலை ஆகிவிட்டது.
நாமும் பாடலை சிறிது மாற்றி பாடுவோம்.
"நெனச்சது ஒண்ணு நடந்த து ஒண்ணு
அதனாலே முழிக்குது ஆளுநர் கண்ணு.
கணக்கும் தவறாகிப் போனதாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு"
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!