Politics
"சிவசேனாவை நான்தான் திட்டமிட்டு உடைத்து, அக்கட்சியை பழிவாங்கினேன்"- பாஜக துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சி எனக்கு துரோகம் செய்ததால் தான் திட்டமிட்டு சிவசேனாவை உடைந்தேன் என பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ஆம், நான் சிவசேனாவை பழிவாங்கினேன். எங்களோடு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக்கொண்டு, எங்களுடனே எந்நேரமும் இருந்து கொண்டு, எங்களோடு சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் வேறொரு கட்சியோடு சேர்ந்ததால் அதற்க்கு பழிவாங்க வேண்டும். நானும் அப்படித்தான் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனக்கு துரோகம் செய்தால் நான் பழிவாங்குவேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி மராட்டிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்னாவிஸின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத், "மகாராஷ்டிரா கலாசாரத்தில் பழிவாங்கும் அரசியலுக்கு இடமில்லை. புதிய முன்னுதாரங்கள் மற்றும் மரபுகள் உருவாக்கப்பட்டால் அது மகாராஷ்டிரா கலாசாரத்துக்கு எதிரானது" எனக் கூறியுள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் பட்னாவிஸின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு பட்னாவிஸின் கருத்தால் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!