Politics
“கார்களில் போலிஸ் ஸ்டிக்கர்ஸ்” - Tollgate கட்டணத்திற்கு பயந்து பா.ஜ.க-வினர் செய்த மோசடி அம்பலம்!
புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியம் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாஹேவில் நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்பதற்காக, புதுச்சேரியிலிருந்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவண குமார் சென்றார்.
அப்போது அவருடன் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சென்றுள்ளனர். இதனிடையே அமைச்சருடன் மாஹேவுக்கு சென்ற பா.ஜ.கவினர் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு சுமார் 700 கி.மீ தொலைவு உள்ள நிலையில் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி களில் பா.ஜ.க-வினர் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்க வாகனம் தவிர்த்து, 3க்கும் மேற்பட்ட தங்களது சொந்த கார்களில் பா.ஜ.க-வினர் போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!