Politics

“ஒரே நாடு - ஒரே படுக்கையா?” - ‘குஜராத் மாடல்’ அரசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திய சமூக ஊடகங்கள் !

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மோர்பியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி சிகிச்சை பெற்று வருபவர்களை முக்கிய ஊடகங்கள் நேரில் சந்தித்து பேட்டி எடுத்தது.

அப்போது அவர்களை வைத்திருந்த அறையில் குட்கா தாள்கள், சிகரெட் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் மோடியின் குஜராத் மாடலை விமர்சித்து வருகின்றனர். இதன்பின்னர் இரண்டு நாளுக்கு பிறகு பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் மக்களை சந்திக்க பிரதமர் மோடி சென்றுள்ளார்.

மோடியின் வருகையையொட்டி, அவசர அவசராமாக மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்த படுக்கையறை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை புதிதாக கொண்டுவந்து வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது ஒரே ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்து புது பொருட்களை வைத்து அலங்கரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஒரே அறையில் 10க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை தனிதனியாக சந்திப்பது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்த இணையதளவாசிகள் ஒரே ஒரு என்ற முழக்கத்தை முன்வைக்கு மோடி அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே படுக்கை என முடிவுக்கு வந்துள்ளதா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also Read: “பிரதமர் மோடியின் வருகைக்காக புதிய படுக்கைகள்..” : சினிமா செட் போல மருத்துவமனையை மாற்றிய குஜராத் அரசு!