Politics

“இது நாட்டிற்கே கேடு விளைவிக்கும்..” - தலைமை நீதிபதி இருந்த மேடையில் எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி !

நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவது, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிவிமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NUJS) நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர்.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு லலித் முன்னிலையில் மம்தா பானர்ஜீ உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவது கவலையளிக்கிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால் நாட்டிற்கு கேடு விளைவிக்கும். அது மட்டுமின்றி இது நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாப்பை இந்திய நீதித்துறை உறுதிசெய்ய வேண்டும். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. ஜனநாயகம் எங்கே இருக்கிறது?.. தயவுசெய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் நீதிபதியே.

இது இக்கட்டான துன்புறுத்தலிலிருந்து மக்களை நீதித்துறை தான் பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விஷயங்கள் நடக்கின்றன. இதை குறிப்பிடுவதற்கு நான் வருந்துகிறேன். என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் நாட்டில் மோசமான நிலைமை நிலவி வருகிறது.

நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். இரண்டு மாதங்களில், நீதித்துறை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார்" என்றார்.

Also Read: “மன்னிப்பு கேட்க முடியாது.. No issues to me”: பத்திரிக்கையாளர்களிடம் மீது மீண்டும் ஆணவமாக பேசிய அண்ணாமலை!