Politics
“அவர் ஒரு அரசியல் கோமாளி.. பா.ஜ.க-வினர் அரசியல் ஆதாயம் தேடுவது தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் பேச்சு!
“கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பந்தை இரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை ராமநாதபுரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. 26 கோடி மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. 210 கோடி மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளது.
ஒரு கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவித்தனர். சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல.
அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பா.ஜ.க மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்?
கட்சி நிர்வாகிகளிடம் பந்தை இரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை; என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன்.
ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல; ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்து பேசி, அவரே என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம்.
4 நாட்களுக்கு பிறகு அரசியல் பேச வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார். கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது. மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாள் தொகுதியில் இருந்தார்? அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை.
சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ.க-வினர் அரசியல் ஆதாயம் தேடுவது எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!