Politics
‘அன்றே சொன்னார் தலைவர்’: ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும்..கலைஞர் போட்ட ட்விட்டர் பதிவுகளும்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 செப்டம்பர் 2016 அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 2016 அன்று அவரின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது .
அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், வழக்கமான உணவுமுறைப்படி உண்கிறார் என மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது. ஆனால் திடீரென 30 செப்டம்பர் 2016 அன்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்தில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் வருவதை தடுக்க தமிழக அரசு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "வதந்திகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும், அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தமிழக ஆளுநர் கையிலெடுக்க வேண்டும். CM உடல் நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வதந்திகள் பரப்பி வருகிறார்கள். வதந்திகளை தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் .
முதல் அமைச்சருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் நீடிக்கிறது என்றால்,முறைப்படி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு அரசு முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.சமூக வலை தளம் உள்ளிட்டவற்றின் மூலமாக வீண் வதந்திகளைப் பரப்பி, அதை நம்பிக் கொண்டு அவருடைய கட்சித் தொண்டர்களே வேதனையடைகின்றனர்.ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன் வரவில்லை முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? " என பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடந்து அக்டோபர் 13ம் தேதி அன்று கலைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்! முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் OPS கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி, அவர் யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை" என பதிவிட்டிருந்தார்.
அப்போது கலைஞரின் இந்த சந்தேகங்கள் குறித்து அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் தமிழ்நாடே பரபரப்பான நிலையில், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவல் வெளிவந்தது. அனைத்தும் மர்மமான முறைகள் நடைபெற்று அதிமுகவினர் உள்ளிட்ட தமிழ்நாட்டு பொதுமக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இறுதியாக 5 டிசம்பர் 2016 அன்று ஜெயலலிதா மரணமடைந்ததாக இரவு 11:30 மணியளவில் அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவிய நிலையில், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக உடைந்தது. அதன்பின்னர் சசிகலா கால்களில் தவழ்ந்து பழனிசாமி முதலமைச்சரான நிலையில், ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றார். அதன்பின்னர் சசிகலா அணி பழனிசாமி அணியாக மாறியது.
இதனிடையே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு வைத்த நிலையில், பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகள் ஒன்றிணைத்தன. அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.
அதிமுக ஆட்சி காலத்தில் மந்தமான நடைபெற்ற ஆணைய பணிகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் வேகம் பெற்றது. இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. பின்னர் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஆணைய அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குற்றம் சாட்டியதை போலவே நிகழ்வுகள் நடைபெற்றது. "ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் சசிகலா அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது எண்மை. ஆனால் அதன் பிறகு நடந்த அனைத்தும் சசிகலாவால் ரகசியம் காக்கப்பட்டுள்ளது." போன்ற பகீர் குற்றசாட்டுகளை ஆணையம் முன்வைத்தது.
மேலும் சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது என ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கலைஞர் முன்வைத்த குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மையாக இருப்பதாக கலைஞரின் பழைய பதிவுகளை முன்வைத்து இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!