Politics

அடுத்த பொதுத்துறை வங்கியும் காலி.. மோடி அரசால் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் IDBI வங்கி !

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யின் 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி பங்குகள் அடுத்த வந்த நாட்களில் கடும் சரிவை சந்தித்தது. இதனால் எல்.ஐ.சி பங்குகளின் விலை குறைந்ததால் இரண்டே மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடியை எல்.ஐ.சி நிறுவனம் இழந்தது. இதன்மூலம் தனியார் மயம் தீமையைத்தான் கொடுக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தாலும் இன்னும் ஒன்றிய பாஜக அரசு அதை உணர்ந்தாலும் நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களை விற்பனை செய்து 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு மற்றும் எல்.ஐ.டி கட்டுப்பாட்டில் உள்ள 60.72% பங்குகளை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இந்த நாடே தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தலை எதிர்பார்க்கிறது".. பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!