Politics

இந்தி திணிப்பு: "ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா? ஹிந்தியாவுக்கானதா?"- சு.வெங்கடேசன் MP ஆவேசம்!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், ரயில்வே துறை சார்பில் வெளியிடப்படும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ரயில்வே துறையில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் இந்தியில் மட்டுமே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரயில்வே துறையின் அறிவிப்புகள் தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு கருத்து பகிர்ந்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கிடேசன், "அந்த ட்வீட்டும் இந்தியில்... பொருள் அறிய "கூகுள்" உதவியை தேடனும். ரயில்வே வேலைவாய்ப்புகள் இந்தியாவுக்கானதா?

அல்லது ஹிந்தியாவுக்கானதா? மொழிபாரபட்சத்தை கைவிடுங்கள். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்." என்று கூறியுள்ளார்.

Also Read: "நீங்கள் வேலை செய்தது 11 ஆண்டுகள் அல்ல,9 ஆண்டுதான்" -IPS வேலை குறித்து பொய் சொல்லி மாட்டிய அண்ணாமலை !