Politics
பெட்ரோல் குண்டு வீச்சுகள்: RSS, BJP கும்பல் அரசியல் ஆதாயத்துக்காக நடத்திய நாடகங்கள்: பட்டியலிட்ட சிலந்தி!
வலைதளங்களில் பரவி வரும் செய்தி ஒன்று தந்திடும் விபரங்கள் புறந்தள்ள முடியாததாக இருக்கிறது. அந்தச் செய்தி தரும் தகவலில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கும்பல் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக நடத்திய நாடகங்கள் தேதிவாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
செய்தி 1: கோவில் சொத்து தகராறில் பிரச்சினையை திசை திருப்ப தன் விட்டில் தானே பெட்ரோல் குண்டு விசிய திருவேற்காடு பகுதி பா.ஜ.க. பிரமுகர் பரமானந்தம் கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்து 2: காருக்கு தாங்களே தீ வைத்து விட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர் கைது. இந்தச் சம்பவம் திருவள்ளூரில் 2013ஆம் ஆண்டு. ஜூலை அன்று நடைபெற்றுள்ளது.
செய்தி 3: சென்னை மதுரவாயலிக் தனது காருக்கு தானேதிவைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடக மாடிய பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் சதிஷ்குமாரை போலிஸார் கைது செய்தனர். இது நடந்தது 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16!
செய்தி 4 - சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம். கோபியில் இந்து அதிரடிப் படை நிர்வாகி கைது. இது நடந்தது 2020 ஆம் ஆண்டு , அக்டோபர் 6-ந் தேதி
செய்தி 5 ; விளம்பரத்திற்காகவும் கட்சியில் பதவி உயர்வு கிடைக்கவும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு, பள்ளி வாசல் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதால் தன்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய பா.ஜ.க விருதுநகர் நிர்வாகி சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி எஸ்.பி. அறுவகைத்தில் மனு. இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளி வந்த தேதி 2021ஆம் ஆண்டு, ஜூலை 1ந் தேதி!
செய்தி 8 : சுவாமி அக்னிவேஷ் தன்வசம் கவனத்தைத் திருப்ப விளம்பரம் தேடிக் கொள்ள தன்னைத்தானே தாக்கிக் கொண்டு நாடகமாடினார். இதுபற்றிய செய்தி அவுட்லுக் இணையதளத்தில் வந்த தேதி 2013 ஆம் ஆண்டு, ஜூலை 13-ந் தேதி !
செய்து 7 - பா.ஜ.க. தலைவர் பிரத்யூஸ் மணி திரிபாதி தனக்குத்தானே தாக்கிக் கொண்டு அதன்மூலம் தனது எதிரிகளுக்கு காந்தண்டனை வாங்கித்தார நினைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டார். ஆனால் பரிதாபமாக அவர் இறந்துபோனார். இந்தப் பரபரப்பு தகவல் வந்தது 2013ஆம் ஆண்டு , மசம்பர் 11-ந்தேதி
செய்தி 8 : பிரபலம் ஆவதற்காக தனது கார்மீது பெட்ரோல் குண்டு வீசவைத்த இந்து அமைப்புத் தலைவர்: போலிஸ் விசாரணையில் அம்பலம்! இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி ஏடுகளில் வெளிவந்தது ஏப்ரல் 10-ந் தேதி
செய்தி 9 : இது பொன்னேரியில் நடந்த சம்பவம் குறித்து ஜூலை 7-ந் தேதி வெளிவந்த செய்தி. போலீஸ் பாதுகாப்புக்காக தன் காரிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பு பிரமுகர் கைது!
செய்தி 10: அரசியல் பிரபலமாவதற்காக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகி கைது. கைதானவர் பாரதிய ஜனதா கட்சியின் 10வது வார்டு கிளைத்தலைவர் பிரவின் குமார் என்பராவார். இந்த கைது விபரம் தடுகளில் ஆகர்ட் மாதம், 31-> தேதி வெளிவந்துள்ளது.
செய்தி 11 : கட்சியில் முக்கிய பதவிபெற கூலிப்படையை ஏவி பெட்ரோல் குண்டு விசிய பாரதிய ஜனதா பிரமுகர் ராமநாதன் கைது. இது நடந்தது அக்டோ பர் 3-ந் தேதி கோவையில்! ஏற்கனவே அனுமன் சேனா பிரமுகர் சக்திவேல் தன்னை கடத்திக் கொல்ல முயன்றதாக நாடகமாடி கைதானவர்.
செய்தி 12 : அரசியல் சுயவிளம்பரத்துக்காக தன்னைத்தானே வெட்டிக் கொண்டு நாடகம், இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது. மார்ச் 19, 2020
இப்படி பல தகவல்கள் அடங்கிய சேதிகள் அதற்கான ஆதாரங்கருடன் வலைதளத்தில் வலம் வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். கும்பல் சத்தகையது என் பதைத் தோழரிக்கும் செய்திகள் இவை
தமிழகத்து பி.ஜே.பி. தலைவரோ, இராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்திலேயே அரசியல் நடத்த எண்ணுபவர் என்பதை, சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவர் பேசியதாக வெளிவந்த "தொலைபேசி உரையாடல் தெளிவாகக் காட்டியுள்ளது.
சமீபத்தில் கோவை மற்றும் சில மாவட்டங்களில் நடைபெறும் குண்டு விச்சு சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திட தீவிரமாக பாணியை முடுக்கிவிட்டிருக்கும் காவல் துறை, மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளையும் கருத்தில்கொண்டு ஆராய்ந்திட வேன்டும் என்பதே நம் கோரிக்கை!
இந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக தமிழகம் காவல்துறை விழிப்புணர்வோடி, போதிய பாதுகாப்பு வழங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது!
கோவையில் இருவரும், சேலத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளனர் மாவட்டம் முழுதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், “தமிழகத்தில் சட்டன் ஒழுங்கு கெட்டு விட்டது: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கண்டன ஊர்வலத்தை பா.ஜ.க. நடத்தும்" என்றெல்லாம் தமிழக பா.ஜ.க.. தலைவர் அறிவித்து, அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் முயற்சிகளில் ஈடுபடுவது, போன்ற பா.ஜ.க. தலைவரின் செயல்பாடுகளைக் காணும் பொழுது பொதுமக்களிடையே இந்த ஐயம் உருவாவது இயற்கை தானே!
வலைதளங்களில் வலம்வரும் செய்திகள் பா.ஜ.க.. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் எந்தவிதச் செயல்களிலும் இறங்கிடத் தயங்காதவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இதை எல்லாம்கூடக் காவல்துறை தனது கவனத்தில் கொண்டு, உண்மைக் குற்றவாளிகளை - அமைதிக்கு ஊறு விளைவிக்க எண்ணும் பேர் வழிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தந்திட வேண்டும்.
- சிலந்தி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!